எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில்
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது.
இன்று எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் 'விஸ்காம்' எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் திரையுலகில் தன் தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சிஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு ஏ.சி.சண்முகம் அவர்கள் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் 'விருதினை வழங்கினார். விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டு விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
திரு அருண்குமாரும் உடன் இருந்தார்.
இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி திருமதி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.
Comentários