top of page
mediatalks001

ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக ‘ஹார்ட் பீட் - ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் !




டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் - ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான "மத்தகம் மற்றும் லேபிள்" சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸுக்கு, ரசிகர்களிடம் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சீரிஸின் டைட்டிலை ஒரு அழகான சிறிய வீடியோவில், டைட்டில் தொடரின் பெயர் மற்றும் அதன் கவர்ச்சியான, 'ரிதம் ஆஃப் லைஃப்' எனும் டேக் லைனுடன் வெளியிட்டது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது

Comentarios


bottom of page