top of page

ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'தி ஐ' ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக் !

mediatalks001


வரவேற்பை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'தி ஐ' ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக்


இசைக்கலைஞர்- பாடகி - பாடலாசிரியர்- தனித்துவமான திறமை மிக்க நடிகை- என பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.


ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி ஐ ' ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார்.


இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டு, 'அற்புதமான மற்றும் துணிச்சல் மிக்க ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் எங்களின் 'டயானா'வாக இருப்பார். லண்டன், கிரீஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவை சார்ந்த 'தி ஐ' படக் குழுவினர் இந்த பிரத்யேக நாளில் உங்களை போற்றுகிறோம். கொண்டாடுகிறோம்@ ஸ்ருதிஹாசன் '' என பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன்- டயானா கதாபாத்திரத்தில் நீல வண்ணத்தில் கழுத்தை மூடிய ஸ்வெட்டர் அணிந்து கவலையுடன் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.


இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நடிகை ஸ்ருதிஹாசன், மூன்று ஹாட்டின் இமோஜிகளுடன், 'நன்றி என் அன்பானவர்களே ' என பதிவிட்டு, தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.


ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரமான ஸ்ருதிஹாசனுக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது 'தி ஐ' ( The Eye) எனும் ஹாலிவுட் படத்திலும், நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்திலும், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ' ட்ரெயின்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page