ரசிகர்களைக் கவர்ந்த 'குட் நைட்' கூட்டணியின் அடுத்த படம் “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், மணிகண்டன் நடிக்கும் “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் ( Youtube சீரிஸ் லிவ்இன் புகழ் ) இயக்கத்தில் குட்நைட் மணிகண்டன் நடித்திருக்கும் “லவ்வர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படத்தில் மணிகண்டனின் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
உலகின் ஆதி உணர்வு காதல். ஆனால் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு, சிக்கல் மிகுந்ததாகவே இருந்து வருகிறது. இக்கால இளைஞர்களின் உலகையும், ரிலேஷன்ஷிப்பில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களின் காதல் என எல்லாவற்றையும் பற்றி அழகாக பேசும் ஒரு ரொமான்ஸ் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. அனைவரையும் கவரும் வகையில், இப்படத்தை ஒரு கமர்ஷியல் கொண்டாட்டமாக, அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ளார்.
குட்நைட் படம் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கியவேடத்தில் நடிக்கிறார்.
இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் வலிமையான தொழில் நுட்பக்குழு இப்படத்தில் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு நடத்தியுள்ளது.
முன்னதாக மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் மணிகண்டன் நடித்த குட்நைட் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்நிலையில் இக்கூட்டணி இணையும் இரண்டாவது படம் இதுவென்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் குறித்த அறிவிப்புகளை தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
Comments