நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் முதல் முதல் சிங்கிள் ’தீரா மழை’ வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது!
விஜய் ஆண்டனியின் படங்கள் எப்போதுமே அழகான பாடல்களுக்காக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் வெளியான அவரது வரவிருக்கும் படமான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் முதல் சிங்கிள் டிராக் 'தீரா மழை'யும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது. இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பெப்பி, ஃபாஸ்ட்-பீட், பவர் பேக்ட் பாடல்கள் இந்த காலத்தில் டிரெண்டிங் என்ற நிலையில், மெலோடியாக வெளிவந்திருக்கும் இந்தப் பாடல் இசை ஆர்வலகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘தீரா மழை’ பாடலை இந்தி படங்களில் பிரபல இசையமைப்பாளர் ராய் இசையமைத்து பாடியுள்ளார். வந்தனா மசான் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலின் தெலுங்கு பதிப்பான ‘தூஃபன் லா’ ஏற்கனவே 200K+ பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, வாகு மசான் மற்றும் ஹரி டஃபுசியா. படத்தொகுப்பு பிரவீன் கே.எல். செய்துள்ளார்.
Comments