2008ம் வருட கால கட்டத்தில் உயர் அதிகாரி ஜெயராம் தலைமையில் இந்திய உளவுத்துறையில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவில் வேலை செய்யும் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் அமீர் ஆகியோர் மோகன் தலைமையிலான பயங்கரவாதிகளின் குழுவிடமிருந்து யுரேனியத்தை மீட்டெடுக்க கென்யாவிற்கு புறப்பட்டு செல்கின்றனர்.
கென்யாவில் இரயிலில் நடக்கும் சண்டையில் வில்லன் மோகன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்து விட, விஜய் தன் குழுவுடன் வெற்றிகரமாக இந்தியாவுக்கு திரும்பி வருகிறார்.
இந்நேரத்தில் தன்னுடைய பணியின் காரணமாக தாய்லாந்து செல்லவிருக்கும் விஜய் தன் குடும்பத்தையும் இன்பச் சுற்றுலா என சொல்லி அழைத்துச் செல்கிறார்.
தாய்லாந்து செல்லும் போது தனது மனைவி சினேகா மற்றும் தனது மகனை உடன் அழைத்துச் செல்கிறார். அங்கு விஜயின் மகனை மர்ம நபர்கள் கடத்தி விடுகிறார்கள்.
மகனை காப்பாற்றும் முயற்சியில் விஜய் ஈடுபடும் போது, குழந்தையை கடத்தி சென்ற வாகனம் விபத்தில் சிக்கி அதில் இருந்த குழந்தைகளுடன் விஜய் மகனும் இறந்து விடுகிறான் .
மகனை பறிகொடுத்ததால் மனைவியான சினேகா குடும்பத்துடன் விஜய்யுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் அவருடன் வாழ்ந்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது வேலை காரணமாக ரஷ்யாவுக்கு செல்லும் விஜய் அங்கே போராட்ட குழுவில் தன்னைப் போல் உருவம் கொண்ட ஒரு இளைஞனை சந்திக்கிறார்.
அதிர்ச்சியில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கும் விஜய்க்கு, ஒரு கட்டத்தில் இளைஞனான விஜய்யை சந்திக்கும்போது இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த தனது மகன் தான் என்பது தெரிய வருகிறது.
மகனை காப்பாற்றி தன்னுடன் சென்னைக்கு அழைத்து வரும் விஜய், தனது மகன் மூலம் இழந்த அனைத்தையும் திரும்ப பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் போது, திடீரென அவருடன் இருக்கும் அதிகாரி ஜெயராம் விஜய் கண் முன்னே கொலை செய்யப்படுகிறார்.
அடுத்து விஜய் குழுவிலுள்ள அஜ்மல் அமீரும் கொல்லப்பட திட்டமிட்டு விஜய் மற்றும் அவரது குழுவினரை குறிவைத்து கொலை செய்யும் அந்த மர்ம நபர் யார் ? என்பதை பல திருப்பங்களுடன் ஜனரஞ்சகமாக அனைத்துவித அம்சங்களும் நிறைந்த படம்தான் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்)
அப்பாவாக காந்தி மகனாக ஜீவன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விஜய், உடல் மொழியில் அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பில் வயதானவரின் பாவனைகளை இயல்பாக வெளிப்படுத்தியிருப்பதோடு, மகன் கதாபாத்திரத்தில் துறு துறு இளைஞனாக குறும்புத்தனமான நடிப்பில் ஆரம்பக்கட்ட இளைய தளபதி விஜய்யை ரசிகர்களுக்கு ஞாபக படுத்துகிறார்.
விஜய்யின் நண்பர்களாக நடிக்கும் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் அமீர், அப்பா விஜய்யின் மனைவியாக சினேகா ,மகன் விஜய்யின் ஜோடியாக வரும் மீனாட்சி செளத்ரி, கதைக்கு வில்லனாக நடிக்கும் மோகன்,லைலா , யோகி பாபு , பிரேம்ஜி, வைபவ், அஜய், ஆகாஷ் அரவிந்த், யுகேந்திரன் என நடித்த நடிகர்கள் திரைக்கதைக்கு கூடுதல் பலம் .
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் !!
கதையின் வேகத்திற்கு இணையாக ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனியின் ஒளிப்பதிவு.
பட தொகுப்பாளர் வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு நேர்த்தி ,,,
படத்திற்கு பக்க பலமாக வசனங்கள் எழுதிய விஜியும் , வெங்கட் பிரபுவும்
வழக்கமான விஜய் பட பாணியில் பஞ்ச் மற்றும் அரசியல் வசனங்கள் எதுவும் இல்லாமல் பழைய பார்முலாவில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தை கொண்ட கதை களத்தில் ,,, ரசிகர்கள் விரும்பும் பக்கா கமர்ஷியலுடன் கிளைமாக்ஸில் ராக்கெட் வேகத்தில் பறக்கும் திரைக்கதையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பின்னணி டோனியின் எண்ட்ரி என ஜனரஞ்சகமாக அனைத்துவிதமான அம்சங்களும் நிறைந்த படமாக,,,,, விஜய் ரசிகர்களோடு படம் பார்க்கும் அனைவருக்கும் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
ரேட்டிங் - 3.5 / 5
Comentarios