“ஹைய்யோடா” டீசரை வெளியிட்ட SRK , ரொமான்ஸ் உடன் மீண்டும் இணையும் ஷாருக்கான்!! ரொமான்ஸில் கலக்கும் வின்டேஜ் ஷாருக்கானை காண ரசிகர்கள் ஆர்வம்
“ஜவான்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சம் தொட்டிருக்கும் இந்த இறுதிக்கட்டத்தில், ரொமான்ஸில் பின்னியெடுக்கும் பழைய ஷாருக்கானை ரசிகர்கள் காணும் நேரம் வந்துவிட்டது. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள "ஜவான்" திரைப்படத்தின் ரொமான்ஸ் பாடலான 'ஹைய்யோடா' பாடல் டீசரை ஷாருக் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
“ஜவான்” படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான "வந்த எடம்" பாடலின் உற்சாகமான கொண்டாட்டத்திற்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் ஒரு மென்மையான காதல் பாடலை பார்வையாளர்களுக்கு வழங்க தயாராகியுள்ளனர். இந்த 'ஹைய்யோடா' பாடல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
சமீபத்தில், #AskSRK அமர்வின் போது, ஷாருக்கான் ஜவான் படத்தில் இனிமை மற்றும் மென்மையான ரொமான்ஸ் பாடலான ஹைய்யோடா பாடல் தான் மிகவும் பிடித்த பாடலென்று குறிப்பிட்டிருந்தார். ஷாருக்கின் வசீகரிக்கும் நடிப்பினில், காதல் நாயகனாக அவரை மீண்டும் திரையில் காண, ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Comments