top of page

AskSRK இல் தனது அசத்தலான பதில்களுடன் மீண்டும் நடிகர் ஷாருக்கான் எங்கெங்கும் ஜவான் பட உற்சாகம்!


நடிகர் ஷாருக்கான் #AskSRK இல் தனது அசத்தலான பதில்களுடன் மீண்டும் வந்துள்ளார்! எங்கெங்கும் ஜவான் திரைப்பட உற்சாகம் !!


ஷாருக்கான் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், பதான் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தளித்தார். இந்தியத் திரையுலகின் வசூல் சாதனைகளை முறியடித்து மிகப்பெரும் பிளாக்பஸ்டராக பதான் வெற்றி பெற்றது. நடிகர் ஷாருக்கான் சமூக ஊடகங்கள் வாயிலாக தன் ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார். அதற்கான மிகப்பெரும் ஆதாரமே அவரது மாதாந்திர #AskSRK அமர்வு ஆகும், அங்கு அவர் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறார். அமர்வில் அவர் அளிக்கும் பதில்கள் எப்போதும் கவனிக்கப்பட வேண்டியவை, ஏனெனில் அவை பகடியாகவும், வேடிக்கையாகவும் மட்டுமல்லாமல், அவரது அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் வெளிப்பட்டு வருகின்றன. சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று மற்றொரு #AskSRK அமர்வை நடத்தினார் இந்த அமர்விலும் அவரது பதில்கள் வெகு சிறப்பாக அமைந்தது.



ஜவான் திரைப்படத்தை ரசிக்கும் மாலை நேரத் திட்டம்



#AskSRK அமர்வில் ஒரு டிவிட்டர் பயனர் ஷாருக்கானின் அன்றைய மாலை நேரத் திட்டத்தைப் பற்றிக் கேட்டார், அதற்கு நடிகர் ஷாருக்கான், "ஜவானை இயக்குநர் அட்லீயுடன் பார்க்கலாம்" என்றிருக்கிறேன் எனப் பதிலளித்தார்.



ஜவான் மிகப்பெரும் சவால்கள் நிறைந்த படைப்பு


மற்றொரு பயனர் ஷாருக்கானிடம் டன்கி அல்லது ஜவான் எந்த திரைப்படம் உடல்ரீதியாக மிகவும் சவாலானதாக இருந்ததாகக் கேட்டார், அதற்கு அவர், "நிச்சயமாக ஜவான் நிறையச் சவால்கள் மிகுந்த படைப்பாக இருந்தது" என்று பதிலளித்தார்.



ஜவான் திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க ஒரு வேண்டுகோள்.


ஷாருக்கானின் ரசிகர் ஒருவர் ஜவானை விரைவில் காட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தார், அதற்கு நடிகர் ஷாருக்கான் "செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்" என்று கூறினார்.


ஜவானில் விஜய் சேதுபதி மிகவும் கூலாக இருக்கிறார் என்றார் ஷாருக்கான்


எங்கள் ஜவான் வில்லனைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என ஒரு டிவிட்டர் பயனர் ஷாருக்கானிடம் கேட்டார், அதற்கு அவர், "@VijaySethuOffl எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மற்றும் ஜவானில் அவர் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் என்றார்"

Comments


©2020 by MediaTalks. 

bottom of page