top of page

’ஜவான்’ - பட விமர்சனம்!இந்திய ராணுவ வீரரான ஷாருக்கான் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு துப்பாக்கியால் சுடப்படுகிறார்.


உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் இருக்கும் ஷாருக்கானை பழங்குடியினர் மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றுகின்றனர் .


ஷாருக்கானின் மனைவியான தீபிகா படுகோனே, தனது கணவரை கொலை செய்ய முயன்றவர்களை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார்.


அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறக்க, வளரும் குழந்தையிடம் அப்பா ஷாருக்கானை பற்றி சொல்பவர், வளர்ந்து பெரியவன் ஆனவுடன் அப்பாவின் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை பொய் என நிரூபித்து, அவர் கடமைமிக்க ராணுவ வீரர்,,, தேச துரோகி அல்ல என்பதை நீதான் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறார்.


பின்னாளில் ஜெயிலராக இருக்கும் மகன் ஷாருக்கான் (ஆசாத்) மாறுவேடத்தில் பெண் கைதிகளை வைத்து பயணிகளுடன் மெட்ரோ ரயிலை கடத்துகிறார். பயணிகளை பணய கைதிகளாக வைத்து தொழிலதிபர் விஜய் சேதுபதியிடம் இருந்து பல ஆயிரம் கோடி வாங்கி விவசாய மக்களின் விவசாய கடனை அடைகிறார்.


அதன்பின் சுகாதார துறை அமைச்சரை கடத்தி இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளை சீரமைக்கிறார்.


மேலிடம் நியமிக்கும் சிறப்பு படை அதிகாரியாக இருக்கும் நயன்தாரா தீவிரமாக ஷாருக்கானை பிடிக்க முயற்சி செய்கிறார்.


இந் நிலையில் விஜய் சேதுபதி ஷாருக்கானை கொல்ல திட்டம் போடுகிறார். இந் நேரத்தில் நயன்தாராவை ஏமாற்றி ஷாருக்கான் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் ஆட்கள் ஷாருக்கானையும் நயன்தாராவையும் ஒன்றாக கடத்தி அவர்களை கொல்ல முற்படும்போது,,,, மற்றொரு ஷாருக்கான் (விக்ரம் ரதோர்) அங்கு வந்து விஜய் சேதுபதியின் ஆட்களை அடித்து பந்தாடி மகன் ஷாருக்கானை காப்பாற்றுகிறார் .

முடிவில் தந்தையும் மகனும் சேர்ந்து விஜய் சேதுபதியை பழி வாங்கினார்களா ?

ராணுவ வீரரான தந்தை ஷாருக்கான் குற்றமற்றவர் என்பது நாட்டிற்கு நிரூபணம் ஆனதா ? என்பதை சொல்லும் படம்தான் 'ஜவான்'


கதையின் நாயகனாக நடிக்கும் ஷாருக்கான் அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் .


உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் ஆக்க்ஷன் , காதல் காட்சிகளிலும் நடிப்பின் ஆளுமையில் படம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்துகிறார் .


சிறப்பு படை அதிகாரியாக கம்பிரமான நயன்தாரா ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடிப்பதுடன் காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் !

மிரட்டும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி,அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபிகா படுகோனே,,சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் சஞ்சய் தத், ப்ரியாமணி உடன் நடிக்கும் நடிக -நடிகையர் அனைவரும் நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் !


அனிருத்தின் இசையும் ,ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவும் , அனல் அரசு, யானிக் பென் உள்ளிட்ட ஸ்டண்ட் இயக்குநர்களின் ஆக்க்ஷனும் படதொகுப்பாளர் ரூபனின் பட தொகுப்பும் கதைக்கு பக்க பலமாக இருக்கிறது .


சமூக பிரச்சனைகளான கடன் வாங்கி அந்த கடனை செலுத்த முடியாமல் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் வங்கி அதிகாரிகள்,,,,, கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாத தொழிலதிபர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்வதை பற்றிய கேள்வியை எழுப்புவதுடன் ,, அரசியல்வாதிகளின் மோசடிகளை தோலுரிப்பதுடன், அதிரடி ஆக்க்ஷன் கலந்த பக்கா மாஸ் ஹீரோவான ஷாருக்கானின் நடிப்பின் ஆளுமையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அட்லீ.


ரேட்டிங் ; 4 / 5


ரசிகர்கள் கொண்டாடும் ஷாருக்கானின் மாஸ் ஆக்க்ஷன் படம் !Comentários


bottom of page