பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் Jபேபி மார்ச் 8 ல் வெளியாகிறது.
சென்சாரில் எந்த கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் வெளியாகும் பா
இரஞ்சித் தயாரித்த படம் Jபேபி
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி.
அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதள் வழங்கியுள்ளார்கள்.
குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள்.
பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் .
ஊர்வசி, தினேஷ், மாறன்,
கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண்
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை - டோனி பிரிட்டோ.
ஒளிப்பதிவு - ஜெயந்த் சேது மாதவன்,
எடிட்டிங் - சண்முகம் வேலுச்சாமி,
கலை - ராமு தங்கராஜ்,
பாடல்கள் - கபிலன் உமாதேவி , விவேக்.
Comments