top of page

'ஜிகிரி தோஸ்த்'-அறன் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிக்கும் படம்!

  • mediatalks001
  • Nov 20, 2023
  • 1 min read

ree

அறன் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிக்கும் ஜிகிரி தோஸ்த்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரும், பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவருமான அறன் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார். கே.பிரதீப் உடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அறன். ஜிகிரி தோஸ்த் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை எஸ்.பி.அர்ஜூன் மற்றும் ஹக்கா ஜெ இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல், இதன் கதை நண்பர்களை சுற்றியே நகர்கிறது. மூன்று நண்பர்கள் அவுட்டிங் செல்லும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். பிறகு, அந்த பெண்ணை கேங்ஸ்டரிடம் இருந்து காப்பாற்றினார்களா என்பதே படத்தின் கதையாக உருவாக்கி வருகிறார்கள்.


ree

இதில் அவர்கள் “டெரரிஸ்ட் டிராக்கர்” எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இப்படத்தின் சிறப்பம்சம்.

அறன் மட்டுமின்றி பிக் பாஸ்-இல் புகழ் பெற்ற ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.ஜே.ஆஷிக், பவித்ர லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, லேட் ஆர்.என்.ஆர். மனோகர், சரத், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

படத்தை அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அருள் மொழி வர்மன், ஒளிப்பதிவு ஆர்.வி. சரண், சண்டை பயிற்சி மகேஷ் மேத்யூ, நடனம் தினா, ஆடியோகிராஃபி பணிகளை சரவண குமார், டி.ஐ. மற்றும் சி.ஜி. பணிகளை ஏ.கே. பிரசாத் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தின் பாடல்களை சுதன் பாலா எழுதியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Comments


©2020 by MediaTalks. 

bottom of page