top of page
mediatalks001

’ கல்கி 2898 கி.பி ’ - பட விமர்சனம் மகாபாரத கதை கலந்த குழந்தைகள் முதல் அனைவரும் ரசிக்கும் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படம்


6000 வருடங்களுக்கு முன் நடந்த மகாபாரதம் போரின் முடிவில் தொடங்கும் கதை உலகம் பல அழிவுகளை சந்தித்தப் பின் கடைசியாக பல நூறு ஆண்டுகள் கடந்து நவீன உலகில் கி.பி 2898 ஆம் ஆண்டு அதி நவீனமான விஞ்ஞான ரீதியான காலத்தில் உலகின் கடைசி நகரமாக மாறும் காசியில் மக்கள் அனைவரையும் பஞ்சத்திலும் பசியிலும் கொடுமைப்படுத்தி தேசத்தில் உள்ள அத்தனை வளங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டு காம்ப்ளக்ஸ் என்ற புதிய உலகத்தை உருவாக்கி, பல சக்திகளோடு இறப்பின்றி 200 வருடங்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் ( சுப்ரீம் யாஸ்கின்) கமல்ஹாசன் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வாழ்ந்து வருகிறார்

கமல்ஹாசனிடம் இருந்து மக்களை விடுவித்து உலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சம்பாலா ரீபல்ஸ் குரூப் போராட்டக்குழு முயற்சித்து வருகிறது.

வலுவிழந்து இருக்கும் கமல்ஹாசன் 'பிராஜக்ட் கே' என்ற பெயரில் அறிவியல் தொழில்நுட்பம் கலந்த கருத்தரித்தல் மையத்தில் பல பெண்களை கரு உருவாக்கம் செய்து அதிலிருந்து சக்திகளைப் பெற அவர்களின் கருவில் உள்ள சீரத்தை பயன்படுத்துகிறார்.

அந்த சீரம் கமல்ஹாசன் உடலில் செலுத்தி வலு பெற பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கருவுற்ற பெண்ணின் வயிற்றில் மூன்று மாதங்கள் மட்டுமே கரு தங்குகிறது அதற்கு பிறகு கரு கலைந்துவிடுகிறது.

அதனால் தகுதியான பெண் யார் என்ற தேடலில் 'சம் 80' என்ற கர்ப்பிணியான தீபிகா படுகோனே மாட்டி கொள்கிறார் .

ஐந்து மாத கர்ப்பிணியான தீபிகா படுகோனே தன்னையும், குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள சீரம் எடுக்கும் நேரத்தில் சம்பாலா ரீபல்ஸ் குரூப் உதவியால் காம்ளக்ஸ் இடத்திலிருந்து தப்பித்து விடுகிறார்.

இந்நேரத்தில் நாயகன் பிரபாஸ் காம்ப்ளக்ஸ்க்கு வர வேண்டும் என்பது லட்சியக்கனவுடன் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக சிறிய வேலைகளை செய்து கொண்டும் சண்டையிட்டும் பல யூனிட்களை சேகரித்து பவுண்ட்டியாக மாற்றி காம்ளக்ஸிற்கு போக சேர்த்து வைக்கிறார்.

அவருக்கு உறுதுணையாக புஜ்ஜி என்ற சிறிய பேசும் ரோபோ மற்றும் வித்தியாசமான வடிவமைப்புடன் அசத்தலான வாகனம் ஒன்றை வைத்திருக்கிறார்.

வேறு யுகத்தைச் சேர்ந்த (அஸ்வத்தாமா) அமிதாப் பச்சன் கல்கியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால் தொடர்ந்து வாழ்கிறார்.

தீபிகா படுகோனே வயிற்றில் சுமப்பது கடவுளான கல்கி என்பதை உணர்ந்து அவளை காப்பாற்ற முயல்கிறார் அமிதாப் பச்சன் .

5 மில்லியன் யூனிட்களை பரிசாக பெற்று காம்ளக்ஸிற்கு சென்று சொகுசாக வாழ தீபிகா படுகோனேவை தேடி வருகிறார் பிரபாஸ் .


முடிவில் காப்பாற்ற நினைக்கும் அமிதாப் பச்சனுக்கும் , பிடித்து கொடுக்க நினைக்கும் பிரபாஸிற்கும் நடக்கும் சண்டையில் தீபிகா படுகோனேவை கடத்தி செல்கிறார் பிரபாஸ்.


இறுதியில் தீபிகா படுகோனேவை பிடித்து கொடுத்து காம்ப்ளெக்ஸ் உலகத்திற்கு பிரபாஸ் சென்றாரா?


தீபிகா படுகோனேவின் கருவில் இருக்கும் சீரத்தை எடுக்கும் முயற்சியில் கமல் வெற்றி பெற்றாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’கல்கி 2898 கி.பி’


அதிரடி நாயகனாக பிரபாஸ் ஆக்க்ஷன் காட்சிகளில் அசத்துகிறார் .


சுப்ரீம் யாஸ்கின் என்ற வில்லன் வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். 200 ஆண்டுகளாக வாழும் அவரது கதாபாத்திர வடிவமைப்பு மிரட்டல்.


தெய்வ குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே, அஸ்வத்தாமாவாக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், பசுபதி , ஷோபனா , இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவில் பக்க பலமாக விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் பாராட்டும்படி இருக்கிறது.


சந்தோஷ் நாராயணின் இசை படத்தின் கூடுதல் பலம் .


இந்திய இதிகாச புராணக்கதையுடன் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக மிகப்பெரிய அறிவியல் கற்பனை கதையோடு சைன்ஸ் ஃபிக்‌ஷனோடு நம்பும்படியான திரைக்கதையை உருவாக்கி மக்களை பிரமிக்கும் வகையில் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், மக்கள் வாழ்விடமாக இருக்கும் நகரத்தின் வடிவமைப்பு என மகாபாரத கதை கலந்த குழந்தைகள் முதல் அனைவரும் ரசிக்கும் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின்.


ரேட்டிங் - 3.5 / 5

Comments


bottom of page