top of page
mediatalks001

'வா வாத்தியார்' - கார்த்தி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !



கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!


நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!


தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.


இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.


படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக கார்த்தி காக்கி உடையும், கலர் கலரான கண்ணாடியையும் அணிந்து தோன்றுவதும், பின்னணியில் தமிழ் திரையுலகத்தின் சாதனை செய்து, இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாம்பவான் எம்ஜிஆரின் வேடமணிந்து கலைஞர்கள் நிற்பதும்... படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Comments


bottom of page