top of page

மீண்டும் வெளியாகும் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’

  • mediatalks001
  • Apr 30, 2024
  • 1 min read

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!

ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான 'பில்லா' படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம் செய்திருந்தார். 'பில்லா' படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பி பார்க்கும் படமாக இது உள்ளது. இப்போது, 'பில்லா' ரீ-ரிலீஸ் என்ற செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ​​​​

ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி 'பில்லா' படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். "இந்தத் திரைப்படம் வெற்றிகரமான ரீமேக்குகளில் ஒன்றாக சினிமாத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. 'பில்லா' திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு அஜித் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்த ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக அமைந்தது. மே 1, 2024 அஜித்குமார் சாரின் பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படத்தை மீண்டும் வெளியிட ஏடிஎம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றனர்.

விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'பில்லா' பாக்ஸ் ஆஃபிஸில் அற்புதமான சாதனையைப் படைத்தது. அஜித்குமாரின் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். நீரவ் ஷாவின் கண்கவர் காட்சியமைப்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பவர் பேக் இசை ஆகியவை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கின.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page