top of page

1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்பட பூஜை !


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது !!




100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம்!!


தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.


1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக, இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.


தனது தனித்துவமான காமெடி எண்டர்டெயினர் படங்கள் மூலம், திரையுலகைச் செழிக்க வைப்பதுடன், ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வரும் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தை இயக்குகிறார். இப்படம் அழுத்தமான கதையுடன், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. இயக்குநர் சுந்தர் சி, நயன்தாரா இருவரும் முதல்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தொழில் நுட்ப குழுவில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் எடிட்டிங், வெங்கட் ராகவன் வசனம், கலை இயக்கம் பொன்ராஜ், சண்டைப்பயிற்சி ராஜசேகர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.


பரபரப்பான ஆக்சன், வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்து ஒரு அற்புதமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page