top of page

’இந்திரா’ - விமர்சனம்

  • mediatalks001
  • 2 days ago
  • 1 min read



ree

போலீஸ் அதிகாரியான வசந்த் ரவி அடுக்குமாடி குடியிருப்பில் காதல் மனைவி மெஹ்ரினுடன் சந்தோசமாக வாழ்ந்து வரும் சமயத்தில் ஒருநாள் வசந்த் ரவி மது அருந்திவிட்டு போலீஸ் வாகனத்தை இயக்க விபத்து ஏற்படுகிறது, இந்த விபத்தினால் அவர் சஸ்பெண்ட்செய்யப்படுகிறார்.


மன உளைச்சல் ஆன வசந்த் ரவிக்கு குடிப்பழக்கம் அதிகமாகி ஒரு கட்டத்தில், குடியால் தனது பார்வையை இழந்து விடுகிறார்.


கண் பார்வை இழந்ததால் கணவனை கண்ணுக்கு கண்ணாக பார்த்து வருகிறார் நாயகி மெஹ்ரின்.


இதேசமயம் தன்னை சீண்டியவர்களை கொடூரமாக கொலை செய்து வரும் சுனில் மணிக்கட்டு பகுதி வரை கையினை துண்டாக வெட்டி வீசி எறிந்து வருகிறார்.


இதே போல அடுத்தடுத்து சில கொலைகளை செய்து வருகிறார். இதனையடுத்து இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டரான கல்யாண்


இதே வேளையில் மெஹ்ரின் கொலை செய்யப்படுகிறார். இதனையடுத்து கொலை செய்த கொலைகாரனை தேடி செல்லும் வசந்த் ரவியிடம் சுனில் மாட்டிக் கொள்கிறார். சுனிலிடம் வசந்த்ரவி கேட்ட மெஹ்ரினை தான் கொலை செய்யவில்லை என்று கூறுகிறார் சுனில்


முடிவில் மெஹ்ரினை கொலை செய்த மர்மநபர் யார்? கொலைகாரனை வசந்த்ரவி கண்டுபிடித்தாரா? இல்லையா? வசந்த் ரவிக்கு பறிபோன கண் பார்வை மீண்டும் கிடைத்ததா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’இந்திரா’ .

இந்திரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் ரவி காதல், ஆக்க்ஷன், கண் பார்வையற்றவராக என அனைத்திலும் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.


வசந்த்ரவி மனைவியாக நடித்திருக்கும் மெஹ்ரின் பிர்சாடா கதைகேற்றபடி எதார்த்த நடிப்பில் நடித்துள்ளார்


வில்லனான நடித்திருக்கும் சுனில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.


அனிகா சுரேந்தர் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் பார்வையாளர்களை கவர்கிறார்.

வசந்த் ரவியின் நண்பராக நடித்திருக்கும் நாகேந்திரா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நடன இயக்குநர் கல்யாண் இருவரும் இயல்பாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் ஒளிப்பதிவும்

இசையமைப்பாளர் அஜ்மல் தஷீன் இசையும் படத்திற்கு பக்க பலம்


தொடர் கொலை மையமாக வைத்து விறுவிறுப்பான ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தை யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சபரீஷ் நந்தா


ரேட்டிங் 3.5 /5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page