’படையாண்ட மாவீரா’ - விமர்சனம்
- mediatalks001
- Sep 22
- 1 min read

வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தயாரிப்பில் வ. கௌதமன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ’படையாண்ட மாவீரா’
மக்களுகாக போராடும் நாயகனான வ.கௌதமன் அரியலூர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒடி வந்து உதவி செய்யக்கூடியவர்.
ஒருநாள் காவல் நிலையத்தில் ஏழை பெண்ணுக்கு கொடுமை நடக்க, அதை தட்டி கேட்க வரும் வ.கௌதமன் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் காவல் உயர் அதிகாரியான பிரபாகர் வ.கௌதமனை ஒழித்துக் கட்ட நினைக்கிறார்.
இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று மக்கள் நிலங்களை கைப்பற்ற நினைக்கிறார்கள்.
இதையடுத்து கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து வ.கௌதமன் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் இறங்கும் போது உடல்நிலை முடியாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்.
முடிவில் கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து போராடிய வ.கௌதமன் மக்கள் நிலங்களை மீட்டுத் தந்தாரா? இல்லையா? என்பதே ’படையாண்ட மாவீரா’ படத்தின் கதை.
காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன் அந்த கதாபாத்திரமாகவே கண் முன் தோன்றுகிறார். அதிரடி சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னடா இயல்பான நடிப்பில் கவனம் பெறுகிறார் .
காடுவெட்டி குருவின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, குறைவான காட்சிகளில் வந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
சமுத்திரக்கனி மனைவியாக நடித்திருக்கும் சரண்யா மற்றும் காடுவெட்டி குருவின் இளம்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் கெளதமன் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
சாம்.சி.எஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
காடுவெட்டி குரு என்று அழைக்கப்பட்டு வன்னியர் சங்கத்தில் முக்கிய தலைவராக இருந்தவர் குரு. அவர் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடியதோடு, சாதி பாகுபாடுகளை தவிர்த்தவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வ. கௌதமன்
ரேட்டிங் : 3.5 / 5
Comments