’பைசன்’ - விமர்சனம்
- mediatalks001
- Oct 18
- 1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் வனத்தி கிராமத்தில் வாழும் விவசாயி பசுபதி மூத்த மகள் ரஜிஷா விஜயன், மகன் துருவ் விக்ரமுடன் வாழ்ந்து வருகிறார்.
கபடி விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட துருவ் கபடி விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் ஆசைப்படுகிறார்
இந்நிலையில் பள்ளி பிடி ஆசிரியர் அருவி மதன் துருவ் விக்ரமின் திறமையை பார்த்து அவரை பள்ளி கபடி அணியில் சேர்த்துவிடுகிறார். ஆனால், துருவ் கபடி விளையாடுவது பசுபதிக்கு பிடிக்காமல் போக அக்கா ரஜிஷா விஜயன், துருவ் விக்ரமுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
இந்நேரத்தில் இருவேறு சாதி பிரிவை சேர்ந்த அமீர் மற்றும் லால் இருவருக்கிடையே கடும் மோதல் ஏற்படுகிறது.
இதில் ஒரு பிரிவினர் அமீரை தலைவராக பார்க்கிறார்கள். மற்றொரு பிரிவினர் லாலை தலைவராக கொண்டாடுகிறார்கள்.
தலைவரான லால் துருவ் விளையாட்டு திறமையை பார்த்து தனது கபடி குழுவில் சேர்த்து கொள்கிறார்.
இதனையடுத்து துருவ் தன் திறமையால் தமிழக அளவிலான கபடி போட்டியில் இடம் பிடிக்கிறார். திறமை இருந்தும் இந்திய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் பெயர் பட்டியலில் துருவ் பெயர் நீக்கப்படுகிறது.
முடிவில் துருவ் இந்திய அளவிலான விளையாட்டு அணியில் இடம் பிடித்தாரா?
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துருவ் கலந்து கொண்டாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’பைசன்’
பைசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துருவ் விக்ரம் இளம் காளையாக எதிரிகளுடன் மோதும் போது துடிப்பான இளைஞராக காதல், ஏக்கம், சண்டை, எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்து கடினமான உழைப்பால் மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்து உயர்ந்து நிற்கிறார்.
அமைதியான நடிப்பில் துருவ் விக்ரமின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன், பிடி ஆசிரியராக நடித்திருக்கும் அருவி மதன், இயக்குநர் அமீர், லால் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
எழில் அரசு.கே ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
கபடி விளையாட்டில் சாதிக்க நினைக்கும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் சாதி வன்முறை சம்பவங்களை மையமாக கொண்ட கதையுடன் அனைத்து சமூகத்தினரும் கொண்டாடும் விதமாக ஆரம்பம்முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்
ரேட்டிங் : 4.5 /5








Comments