top of page

‘ரேகை’ - இணைய தொடர் விமர்சனம்

  • mediatalks001
  • 5 hours ago
  • 1 min read



ree

விடுதியில் தங்கியிருக்கும் ஒருவர் அதிகாலை நேரத்தில் குளிக்கும்போது திடீரென பாத்ரூமில் மூச்சு திணறி மரணம் அடைகிறார்.

இவ் வழக்கை விசாரணை செய்ய குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரான பாலஹாசனிடம் மேலிடம் ஒப்படைகிறது.

இதே காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பவித்ரா ஜனனி பணியாற்ற இருவரும் சேர்ந்து விசாரணையை மேற்கொள்கின்றனர்.


விசாரணையில் இறந்து போனவரின் கைரேகை நான்கு பேருக்கு பொருந்துகிறது.


அந்த ரேகை தொடர்பாக பால ஹாசன் விசாரணையில் சம்மந்தப்பட்ட நான்கு பேரும் இறந்த தகவல் கிடைக்கிறது.


நான்கு பேரும் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவித்தாலும், பால ஹாசன் அதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருக்கிறது, என்பதை உணர்ந்து விசாரணையில் தீவிரம் காட்டும் போது, நான்கு பேரும் கொலை செய்யப்பட்டிருக்கும் உண்மை தெரிய வருகிறது.

முடிவில் எந்தவித தடயங்களும் இல்லாமல் பிரேத பரிசோதனையில் கூட எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் கொலை செய்யப்பட்டிருக்கும் இந்த நான்கு பேர் யார் ?

இவர்களின் கைவிரல் ரேகை ஒரே மாதிரியாக இருந்தது எப்படி ? என்பதை சொல்லும் படம்தான் ‘ரேகை’.


கதையின் நாயகனாக சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கும் பால ஹாசன் கம்பீரமான உடல் மொழியில் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .


போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவித்ரா ஜனனி முக்கியமான கதாபாத்திரத்தில் வினோதினி வைத்தியநாதன் என நடித்த அனைவரும் திரைக்கதைக்கு பக்க பலமாக பயணித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாபின் பின்னணி இசையும், , ஒளிப்பதிவாளர் மகேந்திரா ஒளிப்பதிவும் தொடருக்கு பக்க பலம் .


பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை அடிப்படையாக கொண்டு எதிர்பார்க்காத திருப்பங்களோடு ஒவ்வொரு எப்பிசோட்டிலும் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம், அதன் மூலம் போடப்படும் மர்ம முடிச்சு, அந்த முடிச்சை அவிழ்க்கும் நாயகனின் விசாரணை என விறு விறுப்பான புதிய புலனாய்வு திரில்லராக இத்தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.தினகரன்


ரேட்டிங் - 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page