
ஜெயபிரகாஷ் அனுபமா குமாரின் மகனான நாயகன் சித்தார்த் தமிழ் திரைப்பட இயக்குனராக படத்தை இயக்க முயற்சிக்கும் நேரத்தில் தனக்கு தெரிந்த ரமாவின் மகனை கொலை செய்த விவகாரத்தில் அமைச்சரான சரத் லோகிதஸ்வா மகன் மீது போலீசில் புகார் அளிக்கிறார்.
அமைச்சரின் ஆட்களின் மிரட்டலுக்கு பயப்படாத சித்தார்த் புகாரை வாபஸ் வாங்க மறுக்கிறார் .
இந்நேரத்தில் அமைச்சரின் சதியால் லாரி விபத்து மூலம் தலையில் அடிபட்டு கடைசி இரண்டு வருடங்களின் நினைவுகளை இழந்துவிடும் நாயகன் சித்தார்த் ஒரு கட்டத்தில் எதாவது ஒரு இடத்துக்கு செல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் போது அங்கு உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்கும் கருணாகரனின் காதல் தோல்வி கதையை கேட்டு அவருக்கு ஆறுதல் சொல்ல கருணாகரன் இருக்கும் இடமான பெங்களுருக்கு அவருடன் காரில் பயணிக்கிறார் .
பெங்களூரில் கருணாகரன் குடியிருப்பில் வசிக்கும் நாயகி ஆஷிகா ரங்கநாத்தை கண்டதும் அவர் மீது காதல் கொள்கிறார்.
ஆஷிகா ரங்கநாத் அவரது காதலை ஏற்றுகொள்ள மறுக்கும் நிலையில் ,,,உடனே தன் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் ஆஷிகா ரங்கநாத்தின் புகைப்படத்தை காட்டி அவரை காதலிப்பதாக சித்தார்த் சொல்கிறார்.
குடும்பத்தினர் மட்டும் நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியடைவதோடு, ஏற்கனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆன சித்தார்த் - ஆஷிகா ரங்கநாத் இடையிலான கணவன் -மனைவி உறவைப் பற்றிய உண்மையை அவரிடம் சொல்கிறார்கள்.
நடந்த அனைத்தையும் மறந்த சித்தார்த் தான் காதலிக்கும் முன்னாள் மனைவி ஆஷிகா ரங்கநாத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ போராடுகிறார் .
முடிவில் சித்தார்த்தின் காதலை ஏற்று கொண்டு ஆஷிகா ரங்கநாத் மீண்டும் அவருடன் வாழ்ந்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ''மிஸ் யூ''
கதையின் நாயகனாக நடிக்கும் சித்தார்த் இளமை துள்ளலுடன் கதாபாத்திர தன்மை உணர்ந்து கதைகேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
அமைதியான அழகில் அசத்தும் நாயகி ஆஷிகா ரங்கநாத் ஆர்ப்பட்டமில்லாத இயல்பான நடிப்பில் ஜொலிக்கிறார் .
அமைச்சராக வரும் சரத் லோகிதஸ்வா, நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பாலசரவணன், லொள்ளு சபா மாறன், கருணாகரன் , சஷ்திகா, பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், ரமா, அனுபமா குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஜிப்ரான் இசையும்,ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலம்.
வழக்கமான காதல் கதையாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதையுடன் அமைச்சருடன் மோதல் ,காமெடி, ஆக்ஷன் காட்சிகள் என விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி படத்தை உருவாக்கியுள்ளார் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் என்.ராஜசேகர்.
ரேட்டிங் - 3 / 5
Comments