MediaTalks Logo
Header Advertisement
reviews
16 February 2026 at 10:49•1 Views

‘சீதா பயணம்' - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘சீதா பயணம்' - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

ஸ்ரீராம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இயக்கத்தில்  ‘சீதா பயணம்'

ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், அர்ஜுன், துருவா சர்ஜா , சத்யராஜ், பிரகாஷ் ராஜ், கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர்.

சமையல் கலை நிபுணர் படிப்பை முடித்த தாயை இழந்த நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் அப்பா சத்யராஜிடன் வாழ்ந்து வருகிறார் . சத்யராஜ் ஐஸ்வர்யா அர்ஜுனிடம் திருமணத்தை பற்றி பேசும்போதெல்லாம் அந்த எண்ணம் இல்லாமல் இருக்கிறார்

இந்நிலையில் பிரபல சமையல் கலைஞர் நடத்தும் சமையல்கலை மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக மதுரை செல்கிறார்

மதுரைக்கு காரில் தனியாக செல்லும் ஐஸ்வர்யா அர்ஜுன் வழியில் லிப்ட் கேட்கும் நாயகன் நிரஞ்சனை தன் காரில் ஏற்றி கொள்கிறார் . மதுரைக்கு போகும் வழியில் இருக்கும் சீதாபுரத்தில் தன்னை இறக்கி விட சொல்கிறார் நிரஞ்சன் .

இச் சுழலில் இருவரும் ஒன்றாக காரில் பயணிக்கும் போது பள்ளி சிறுவர்கள் முதல் அடிதடியில் இறங்கும் அர்ஜுன், வழியில் பழம் விற்கும் சிறுமி, டீக்கடை நடத்தும் கோவை சரளா உட்பட பல பேரை ஐஸ்வர்யா அர்ஜுன் சந்திக்கிறார் .

கடைசியில் நிரஞ்சனையும் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டு சமையல் கலை மாநாடு நடக்கும் இடத்திற்கு செல்லும்போது அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து உயிர் பிழைக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் தான் உயிரோடு இருப்பதற்கு வழியில் சந்தித்த அனைவரும் காரணம் என அவர்களுக்கு நன்றி கூறி இனிப்பு வழங்க வேண்டும் என்று அப்பா சத்யராஜிடம் கூறுகிறார்.

இதனையடுத்து முதலில் நாயகன் நிரஞ்சனுக்கு நன்றி சொல்ல நினைத்து முதலில் சீதாபுரத்துக்கு செல்கிறார். அதே சமயம் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சனால் பாதிக்கப்பட்ட நபர் அர்ஜுனிடம் இருவரையும் கொலை செய்ய சொல்கிறார்.

இறுதியில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சனை நேரில் சந்திக்கும்போது அர்ஜுன் என்ன செய்தார் ? சத்யராஜ் ஆசைப்பட்டபடி ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு திருமணம் நடந்ததா ? உண்மையில் நிரஞ்சன் யார் ? என்பதுதான்' சீதா பயணம்' படத்தின் மீதிக்கதை.

சீதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் அனைத்து காட்சிகளிலும் இயல்பான நடிப்பில் காதல், நடனம் , சென்டிமென்ட் மற்றவர்களுக்கு உதவும் மனம் என கதையுடன் இணைந்து உணர்வு பூர்வமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அறிமுக நாயகன் நிரஞ்சன் சிறப்பான நடிப்பில் காதல், நடனம், ஆக்ஷன் என அனைத்திலும் அசத்துகிறார் .

அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ் தனது அனுபவ நடிப்பின் முலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தாத்தாவாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் நடிப்பு படத்திற்கு பக்க பலம் .

சிறப்பு தோற்றத்தில் வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆக்ஷனில் மிரட்டுகிறார் .

துருவா ஷார்ஜாவின் நடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. கோவை சரளா, சரண் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உளள்து. ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு பிரமாண்டமாக அழகாக உள்ளது.

அப்பாவின் பாசம், கூட்டு குடும்ப உறவுகள், வெளியுலக மனிதர்களின் வாழ்வியல் என அனைத்தையும் மையமாக கொண்ட கதையுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் கதையை யாரும் யூகிக்க முடியாத வகையில் அனைவரும் ரசிக்கும் விதத்தில் மிக நேர்த்தியாக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.

ரேட்டிங் - 3 .2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: