“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” - விமர்சனம்
- mediatalks001
- 18 hours ago
- 2 min read

ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், இயக்குநர் ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”
ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கல்லூரியில் படித்து வரும் நாயகன் ஆதவ் கிருஷ்ணா நன்றாக படிப்பதால் உடன் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்கிறார்.
இந்நிலையில் நாயகி சிம்ரனின் அம்மா சிறுவயதிலேயே வேறுறொரு நபருடன் காசிக்கு சென்று விடுவதால் தந்தையின் அரவணைப்பில் பணக்கார பெண்மணியாக வளர்கிறார்.
இச் சுழலில் ஒரு நாள் ஆதவ் கிருஷ்ணா படிக்கும் இதே கல்லூரியில் நாயகி சிம்ரனுக்கு ரவுடிகளால் ஆபத்து வர ரவுடிகளிடம் இருந்து சிம்ரனை ஆதவ் காப்பாறுகிறார்.
இதனையடுத்து ஆதவ் கிருஷ்ணாவும் சிம்ரனும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோரான வினோதினி மற்றும் படவா கோபியை சந்திக்கும் சிம்ரன் சிறுவயதில் தன்னுடைய அப்பாவையும் தன்னையும் விட்டு பிரிந்து சென்ற தன்னுடைய அம்மாவை சந்திக்க விரும்புவதாகும் அதற்காக ஆதவ் கிருஷ்ணாவை உடன் அழைத்துச் செல்வதாகவும் அவர்களிடம் சம்மதம் கேட்கிறார்.
அவர்களின் ஒப்புதலுடன் ஆதவ் கிருஷ்ணாவும் சிம்ரனும் அம்மாவை சந்திப்பதற்காக காசிக்குப் போகிறார்கள்.
இருவரும்காசிக்கு செல்லும்போது ஆதவ் கிருஷ்ணாவிடம் சிம்ரன் அம்மா என்னை தனியாக தான் வர சொன்னார் என்று சொல்லிவிட்டு அம்மாவை பார்க்க செல்கிறார்.சென்ற இடத்தில் அம்மாவை பார்ப்பதற்காக தனியே செல்லும் நாயகி சிம்ரன் காணாமல் போகிறார்.
இதன் பின் அம்மாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி சென்ற சிம்ரன் மீண்டும் வரவில்லை என்பதால் சிம்ரனை தேட ஆரம்பிக்குகிறார் ஆதவ் கிருஷ்ணா.
இதனையடுத்து ஆதவ் கிருஷ்ணாவை கைது செய்யும் போலீஸ் அவரை சிறையில் அடைக்கிறது.
அதன் பின் நடந்தது என்ன ? இதனால் ஆதவ் கிருஷ்ணா சந்தித்த பிரச்சனைகள் என்ன ? இறுதியில் நாயகி சிம்ரனை கடத்தியது யார்? காணாமல் போன நாயகி சிம்ரன் கிடைத்தாரா? காதலர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ''லவ் ஷேர் சப்ஸ்கிரைப்''
கல்லூரி மாணவராக நடித்திருக்கும் நாயகன் ஆதவ் கிருஷ்ணா இளமை துடிப்பு மிக்க இளைஞராக ஆட்டம், பாட்டம், காதல், குடும்பம், நடனம், ஆக்ஷன் என அனைத்திலும் அசத்தலான நடிப்பில் மிக சிறப்பாக நடிக்கிறார் .
கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் நாயகி சிம்ரன் இயல்பான நடிப்பில் கதைகேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்
நாயகனின் அப்பா , அம்மாவாக நடித்திருக்கும் படவா கோபி, வினோதினி , ஜாவா சுந்தரேசன் மற்றும் . மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஷ்வமித்ரா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் NS.சதீஷ் குமார் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
இயல்பான காதல் கதையை மைய கதையாக கொண்டு காதல், குடும்பம் என ஆரம்பிக்கும் கதையில் இரண்டாம் பாதிக்கு பிறகு சஸ்பென்ஸ், எமோஷனல் கலந்த விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படியான திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.மகாலட்சுமி முருகன்.
ரேட்டிங் - 3.2 / 5








Comments