செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ - விமர்சனம்
- mediatalks001
- 16 hours ago
- 2 min read

தேவிபிரசாத் ஷெட்டி & சாத்விக் ஹெப்பார் தயாரிப்பில் இயக்குநர் தேவிபிரசாத் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’
விஜய ராகவேந்திரா, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, உஷா பண்டாரி மற்றும் பலர் நடித்துள்ளனர் .
கொடுரமான முறையில் முள் கம்பிகளால் கை கால்கள் கட்டப்பட்டு மர்மமான முறையில் வயதான ஒருவர் கொலை செய்யப்பட்ட சடலம் கிடக்கிறது. .
இக் கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் விஜய ராகவேந்திரா மேலிடத்தால் நியமிக்கப்படுகிறார்.
தொடர்ந்து இதே போல கொலைகள் நடப்பதால் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படுகிறது
கொலையானவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்படுவதால் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரால் மட்டுமே இப்படி கொலை செய்ய முடியும் என்று மருத்துவர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் காவல் நிலையத்திற்கு வரும் பள்ளி ஆசிரியர் ஒரு வாலிபர் தனது மகளுக்கு தொல்லை கொடுப்பதாக போலீசிடம் புகார் அளிக்கிறார் .அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரிக்கையில் மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் என்பதும் புகார் அளித்த நபரின் மகள் மூன்று மாதத்திற்கு முன்பே தற்கொலை செய்து கொண்ட பெண் என்று தெரிவதோடு இன்ஸ்பெக்டர் துப்பாக்கியும் காணாமல் போகிறது.
இதன் காரணமாக ஆசிரியர் வீட்டிற்கு செல்லும் இன்ஸ்பெக்டர் விஜயராகவேந்திராவை பள்ளி ஆசிரியர் துப்பாக்கியால் சுடுகிறார். இந்த கொலைகளுக்கு அந்த ஆசிரியர்தான் காரணம் என்று அவரை சிறையில் அடைக்கிறார்கள் .ஆனால் மீண்டும் மர்ம கொலைகள் நடக்கின்றன,
இறுதியில் நாயகன் விஜய ராகவேந்திரா அந்த கொலையாளியை கண்டுபிடித்தாரா ? தொடர் கொலைகளை செய்யும் மர்ம நபர் யார் ? கொலைகளுக்கான பின்னணி என்ன ? என்பதே ‘செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நாயகன் விஜய ராகவேந்திரா கதாபாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வாக இருக்கிறார். புலனாய்வில் கொலைகாரனை பிடிக்க காட்டும் தீவிரம், விசாரணையை மேற்கொள்ளும் விதம் , ஆக்ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பில் தன் திறமையை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.
சீதாராமன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உஷா பண்டாரி , செபஸ்டியன் கதாபாத்திரத்தில் வரும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே என மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் நவனீத் ஷாம் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை சஸ்பென்க் திரில்லர் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது.
கதைக்களத்திற்கு பக்க பலமாக ஒளிப்பதிவாளர் ஹேமந்த் ஒளிப்பதிவு
மர்மமாக நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் காவல் அதிகாரியின் கதையை மைய கருவாக வைத்து தொடர்ந்து கொலைகள், விசாரணை என ஆரம்பிக்கும் கதையில் இரண்டாம் பாதிக்கு பின் காதல், மர்மம், சஸ்பென்ஸ் என சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் கதையை யாரும் யூகிக்க முடியாத வகையில் அனைவரும் ரசிக்கும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் தேவிபிரசாத் ஷெட்டி.
ரேட்டிங் - 3.5 / 5





Comments