
வறட்சியான பிரதேசத்தில் தன் பெற்றோர்களுடன் சிறு வயதில் முஃபாசா மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும்போது ஒரு நாள் இயற்கை வளம் அதிகம் உள்ள மிலேலே என்ற இடத்தை பற்றி அவர்கள் முலம் தெரிந்துகொள்கிறான்.
திடீரென்று அப்போது ஏற்பட்ட கட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, தாய் மற்றும் தந்தையை பிரிந்து வேறு நாடான காட்டு பகுதிக்கு செல்கிறான் சிறுவன் முஃபாசா
இந்நிலையில் புதிய காட்டு பகுதிக்கு செல்லும் முஃபாசா அந்நாட்டு இளவரசன் டாக்கா மற்றும் அவனது தாயும் ஏற்றுக்கொள்ள மன்னனான தந்தை மட்டும் முஃபாசாவை வந்தேறியாகவே நினைக்கிறார் .
ஒரு கட்டத்தில் அந்நிய மன்னன் கிரோஸ் என்ற வெள்ளை சிங்கத்தின் வாரிசான இளவரசன் டாக்காவின் தாயை தாக்க அதை தடுக்க முயலும் முஃபாசா கிரோஸின் வாரிசான இளவரசனை கொன்று விடுகிறான் .
கோபமடைந்த அந்நிய மன்னன் கிரோஸ் அவர்களை கொன்று குவிக்க தன் படையுடன் வர ,, டாக்காவின் தாயின் உத்தரவுபடி, இளவரசன் டாக்காவுடன் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கும் முஃபாசா, தன் பெற்றோர்கள் சொன்ன மிலேலேவுக்கு செல்ல முடிவு செய்கிறார்.
மற்றொரு பக்கம் வில்லன் அந்நிய மன்னன் கிரோஸ் தன் மகனை கொன்ற முஃபாசாவையும் ,டாக்காவையும் தேடி கொல்ல தன் ஆட்களுடன் செல்கிறார் .
முடிவில் கோபமடைந்த அந்நிய மன்னன் கிரோஸ் வெள்ளை சிங்கம் வாரிசான இளவரசனை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்கியதா ?
சிறுவயதில் பெற்றோர்களை பிரிந்த ’முஃபாசா இறுதியில் அவர்களுடன் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’முஃபாசா : தி லயன் கிங்’
கதையின் நாயகன் முஃபாசாவிற்கு அர்ஜுன் தாஸின் கம்பீர குரலுடன் முஃபாசாவின் வீரம் மற்றும் விவேகமும், அசோக் செல்வனின் மென்மையான குரலோடு வரும் டாக்காவின் காதல் மற்றும் துரோகமும், வாரிசான இளவரசனை இழந்த துயரத்தில் அந்நிய மன்னன் கிரோஸ் வெள்ளை சிங்கத்திற்கு நாசரும் ,நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு வி டி வி கணேஷ் , ரோபோ சங்கர் மற்றும் சிங்கம்புலி என இவர்களது டப்பிங் குரல் கன கச்சிதமாக நன்றாகவே பொருந்தியிருக்கிறது.
லின் மானுவேல் மிரண்டா பாடல்களுடன் இசை மற்றும் டவே மேட்ழ்கர் பின்னணி இசை படத்திற்கு பலம் .
குழந்தைகள் கொண்டாடும் படமாக சிங்கத்தின் கதையை வைத்து பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளாகதிரைக்கதையில் படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஆற்று வெள்ளம், மிக பெரிய யானை கூட்டம் ,இறுதிக் காட்சியில் நடைபெறும் சண்டை வரை வி.எஃப்.எக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே மக்கள் மனதில் ஒரு கதாபாத்திரங்களாக வாழ்வது போல பிரமிப்பான உணர்வை உண்டாக்குவது உண்மையான அசத்தல்.
ரேட்டிங் - 3.5 / 5
Comments