MediaTalks Logo
Header Advertisement
reviews
8 March 2026 at 23:02•1 Views

’ஓ பட்டர்ஃப்ளை’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
’ஓ பட்டர்ஃப்ளை’ -  விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

ஆன்ட்ஹில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ் சார்ப்பில் : வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் தயாரிப்பில் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஓ பட்டர்ஃப்ளை’.

பெரியவர்கள் சம்மதத்துடன் நிவேதிதா சதிஷ் , அதுல் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

இந்த சமயத்தில் வேலையை இழந்து தவிக்கும் அதுலும், நிவேதிதா சதீஷும் கொடைக்கானலில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸிற்கு செல்கிறார்கள் .

அந்த கெஸ்ட் ஹவுஸில் நாசர் வேலை பார்க்கிறார் அவர் வண்ணத்துப்பூச்சி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

இந்நிலையில் நாயகி நிவேதிதா சதிஷ் தனது முன்னாள் காதலனை பற்றி கணவருடன் கூற முயற்சி செய்கிறார்.பல தடவை சொல்ல முயற்சி செய்தும் உண்மையை சொல்ல முடியாமல் போகிறது.

இச் சுழலில் இருசக்கர வாகனம் பழுது அடைய வழியில் நிற்கும் சிபி சந்திரனை வீட்டிற்கு அழைத்து வரும் அதுல் சிபி சந்திரனை தன் கல்லூரி நண்பர் என நிவேதிதா சதிஷிடம் அறிமுகப்படுத்துகிறார்.

சிபி சந்திரனை பார்த்த நிவேதிதா சதிஷ் அதிர்ச்சி அடைகிறார்.

நாயகி நிவேதிதாசதிஷ் சிபி சந்திரனை பார்த்து அதிர்ச்சி அடைய காரணம் என்ன? நிவேதிதா சதிஷ் தன் முன்னாள் காதலனை பற்றி அதுலிடம் கூறினாரா? இறுதியில் அதுலின் நிலை என்ன? என்பதுதான் ’ஓ பட்டர்ஃப்ளை’ படத்தின் மீதி கதை .

நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதிஷ், அழுத்தமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பால். தவிப்பு, பதற்றம், ஏக்கம், என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

நாயகி நிவேதிதா  சதிஷின் கணவராக நடித்திருக்கும் அதுல் தனது கதாபாத்திரத்துடன் இணைந்து உணர்வு பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நிவேதிதா சதிஷின் காதலராக நடித்திருக்கும் சிபி சந்திரன் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

வண்ணத்து பூச்சியை பாசமாக பார்த்துக் கொள்ளும் நாசர், துறவறம் பூண்ட சகோதரியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சந்திரமெளலி , கீதா கைலாசம் என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் . பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

முன்னாள் காதலனால் கணவன் – மனைவி இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை மைய கருவாக வைத்து உணர்வுபூர்வமான திரைக்கதை அமைப்பில் வித்தியாசமான அழுத்தம் கொண்ட கதை களத்தில் திரைப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விஜய் ரங்கநாதன்

ரேட்டிங் : 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: