’மேட் இன் கொரியா’ - விமர்சனம்
- mediatalks001
- 2 hours ago
- 2 min read

ஊட்டியில் வாழும் பிரியங்கா அருள் மோகன் பள்ளி பருவத்தில் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கொரிய நாடகத்தில் நடிப்பதால் கொரியா நாட்டிற்கு ஆசைப்பட்டு கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என கனவுடன் வாழ்ந்து வருகிறார் .
கல்லூரி படிப்பை முடித்தவுடன் கொரியா நாட்டிற்கு செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் .
இந்நிலையில் பிரியங்கா அருள் மோகனின் அப்பா தான் நடத்தி வரும் உணவகத்தை மகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இதற்கிடையில் பிரியங்கா அருள் மோகன் ரிஷிகாந்தை காதலிக்கிறார். ரிஷிகாந்தை காதலிப்பதை தெரிந்து கொள்ளும் இவரது அப்பா உடனடியாக பிரியங்கா அருள் மோகனுக்கு திருமணம் நிச்சயிக்க முடிவு செய்கிறார் .
திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கும் பிரியங்கா அருள் மோகன் காதலனால் ஏமாற்றப்பட சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் கொரியா நாட்டுக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கொரியா நாட்டில் மொழி தெரியாமல் தவிக்கும்போது நண்பராக அறிமுகமாகும் பார்க் ஹை- ஜின் மூலம் வீட்டில் ஒரு வயதான பாட்டியை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு சேருகிறார் .
ஒரு கட்டத்தில் பிரியங்கா அருள் மோகன் அந்த பாட்டியின் உதவியுடன் ஒரு உணவகத்தை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடத்துகிறார்.
இச் சூழ்நிலையில் மகனால் ஏற்படும் பிரச்சனையில் பாதிக்கப்படும் பாட்டி உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார் .
இறுதியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பாட்டி உடல் நலத்துடன் பிரியங்கா அருள் மோகனுடன் இணைந்து உணவகத்தை நடத்தினாரா ? காதலித்து ஏமாற்றிய ரிஷிகாந்தை பிரியங்கா அருள் மோகன் மீண்டும் சந்தித்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’மேட் இன் கொரியா’
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன் இயல்பான நடிப்பில் காதல் , குடும்ப பாசம் , நட்பு ,செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் உணர்வு பூர்வமான நடிப்பின் முலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .
பிரியங்கா அருள் மோகனின் காதலராக நடித்திருக்கும் ரிஷிகாந்த் அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பார்க் ஹே-ஜின் நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் ஆகிய கொரியா நாட்டு நடிகர், நடிகைகளுடன் தமிழ் நடிகர், நடிகைகள் என அனைவரும் நடிப்பில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையும் , ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.
கொரியா நாட்டிற்கு செல்ல வேண்டும் என கனவுடன் வாழ்ந்து வரும் தமிழ் பெண்ணின் கதையை மையமாக கொண்டு நட்பான புதிய உறவுகளின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அழுத்தமாக சொல்வதுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி பாராட்டும்படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.ஏ.கார்த்திக்
ரேட்டிங் : 3.5 / 5





Comments