’கொலைச்சேவல்’ - விமர்சனம்
- mediatalks001
- 1 hour ago
- 1 min read

ஆர்பி பிலிம்ஸ் – ஆர்.பி.பாலா – கௌசல்யா பாலா தயாரிப்பில் இயக்குநர் வி ஆர். துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு, பால சரவணன், ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி,, தனலட்சுமி மஞ்சுளா கயல், மணிமேகலை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கொலைச்சேவல்’
வெவ்வேறு சமுகத்தை சேர்ந்த தீபாவும் – கலையரசனும் கைபேசி மூலம் பேசி இருவரும் காதலிக்கிறார்கள்.
நாயகி தீபா பாலு, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தான் காதலித்த நாயகன் கலையரசனை திருமணம் செய்து கொள்கிறார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவுடன் கலையரசன் தன்னுடைய கிராமத்திற்கு வருகிறார்.
கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவை அழைத்துக் கொண்டு குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்து படையலிட வேண்டும் என்று ஏற்பாடுகள் நடக்கிறது.
அதற்காக கலையரசனின் குடும்பமும் அவருடைய நண்பர்களும் முன்பாகவே அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அந்த கோவிலுக்கு சென்று விடுகின்றனர்.
பூஜை முடிந்து குடும்பத்தினர் புறப்பட்டு சென்றதும் தீபாவையும் கலையரசனும் புறப்பட தயாராகிறார்கள். அப்போது ஒரு கும்பல் இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்கிறது.
இறுதியில் இந்த கொலைகும்பலின் வெறித்தனமான தாக்குதலில் கலையரசன் , தீபா இருவரும் உயிர் பிழைத்தார்களா? இந்த கொலைகளுக்கான பின்னணி என்ன ? என்பதுதான் ’கொலைச்சேவல்’ படத்தின் மீதிக்கதை.
அறிமுக நாயகியாக நடித்திருக்கும் தீபா பாலு நிறைமாத கர்ப்பிணியாகவும் கணவன் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராகவும் பாசமாக உணர்வு பூர்வமான நடிப்பில் குறிப்பாக இறுதிக்காட்சியில் படம் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறார்.
நாயகனாக கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பாக நடித்திருக்கும் கலையரசன் , நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன், நாயகியின் அப்பாவாக வரும் கஜராஜ். விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாந்தன் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்துக்கு பக்க பலமாக உள்ளது.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு காடு மற்றும் மலை பகுதிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆணவ கொலையை மைய ப்படுத்திய கதையுடன் அழகாக காதல், குடும்ப உறவு , நட்பு , குலதெய்வ வழிபாடு ஆகியவற்றை கலந்து ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத திருப்பங்களுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வி ஆர். துதிவாணன்
ரேட்டிங் : 3 / 5





Comments