MediaTalks Logo
Header Advertisement
reviews
15 March 2026 at 21:40•1 Views

‘வெஞ்சென்ஸ்’  - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘வெஞ்சென்ஸ்’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

காளி வெங்கட் வளர்ப்பு மகளான பள்ளியில் படிக்கும் அபர்ணதி  வகுப்பில் தன்னை யாருமே கண்டு கொள்வதில்லை என சொல்லும்போது  அதற்கு நன்றாக படித்து மாவட்ட அளவில் முதல் இடத்திற்கு வந்தால் அனைவரும் உன்னை புகழ்ந்து பேசுவார்கள் காளி வெங்கட்  எனகூறுகிறார்.

இதனையடுத்து நன்றாக படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால்,  அந்த மகிழ்ச்சி மூன்று நாட்கள் மட்டுமே நீடிப்பதால். எப்பொழுதும் அனைவரும் தன்னை பற்றிய பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து  புகழ் போதைக்கு அடிமையாகிறாள்.

ஒரு கட்டத்தில் தனது உண்மையான தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளும் அபர்ணதி  வளர்ப்பு தந்தை காளி வெங்கட்டை கொலை செய்து அவரது  உடல் உறுப்புகளை தானம் செய்து மாநில அளவில் பிரபலம் ஆகிறார்.இதன் பின் நன்றாக படித்து பிளஸ் டூ விலும் முதலிடம் பிடித்து ஐஏஎஸ் படித்து அதிலும் முதலிடத்தில் வருகிறார் .

கலெக்டர் ஆனவுடன் பல நல்ல காரியங்களை செய்து மக்களிடையே நல்ல பெயர் எடுத்து தினமும் தன்னுடைய பெயர் பத்திரிகைகளில் வரும்படி நடந்து கொள்கிறார்அபர்ணதி.

இதனால் அபர்ணதிக்கு முதலமைச்சர் இளவரசு மூலம் பல தடைகள் வருகிறது. ஆனால் அந்த தடைகளை முறியடிக்கும் அபர்ணதி முதலமைச்சர் இளவரசுவே அவர்  பேச்சை கேட்கும் நிலைக்கு உயர்கிறார்.

இவரது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாத எதிரிகள் அபர்ணதியை கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.

இறுதியில் அபர்ணதி அரசியல் எதிரிகளிடம் இருந்து தப்பித்தாரா ?  மீண்டும் தனது  அதிரடி ஆட்டத்தை அபர்ணதி  ஆரம்பித்தாரா ? என்பதே   ‘வெஞ்சென்ஸ்’  படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி கம்பீரமான சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை கொடுத்திருக்கிறார். நடை, உடை பேச்சு , தைரியம் , துணிச்சல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, மத்திய அமைச்சராக நடித்திருக்கும் ஜான் விஜய், அபர்ணதியின் வளர்ப்பு தந்தையாக நடித்திருக்கும் காளி வெங்கட், எதிர்க்கட்சி தலைவராக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் என படத்தில் நடித்த அனைவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள் .

இசையமைப்பாளர்  கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு கதை வேகத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.

பழிவாங்கும் எண்ணம் மற்றும் தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும், பாராட்ட வேண்டும் என்கிற புகழ் போதையில் வாழும் பெண்ணின் கதையை மையமாக வைத்து    மாநில அரசியல் முதல் மத்திய அரசியல் என இந்திய அரசியலுடன் ஒரு முழு அரசியல் அமைப்பு கொண்ட திரைக்கதையில்   உண்மை சம்பவங்களுடன்  நாயகி எதிர்கொள்ளும் சவாலான போராட்டங்களுடன் அனைவரும் ரசிக்கும் பரபரப்பான அரசியல் படமாக  திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராகுல் அசோக்

ரேட்டிங் - 3 . 3  / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: