‘நீ FOREVER ’ - விமர்சனம்
- mediatalks001
- Mar 28
- 2 min read

ஜெகதீசன், ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிப்பில் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் ‘நீ FOREVER ’
சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, பிராது , நோபல் ஜேம்ஸ், வித்யா, ஓய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்
பொள்ளாச்சியில் வாழ்ந்து வரும் ஓய்.ஜி. மகேந்திரனின் மகள் வித்யா நிழல்கள் ரவியை காதலிக்கிறார் . ஒரு நாள் ஓய்.ஜி. மகேந்திரனுக்கு தெரியாமல் காதலித்தவருடன் வீட்டை வீட்டு ஓடிவிடுகிறார்.
சில வருடங்களுக்கு பிறகு நிழல்கள் ரவிக்கும் வித்யாவிற்கும் பிரச்சனை ஆன நிலையில் கணவனை பிரிந்து கையில் ஒரு பெண் குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணியாக மீண்டும் அப்பா வீட்டிற்கே வருகிறார்.
மகள் ,பேரன் ,பேத்தி என அனைவரும் ஓய்.ஜி. மகேந்திரனின் கண்டிப்பான கட்டுப்பாட்டில் வாழ்கிறார்கள்.
ஓய்.ஜி. மகேந்திரனின் கண்டிப்புடன் வளர்ந்த சுதர்சன் கோவிந்த் சென்னையில் ஆப் டெவலப்பராக முயற்சிக்கிறார்.
இந்நிலையில் ‘நீ ஃபார் எவர்’ என்ற பெயரில் காதலர்களுக்காக ஒரு சாட்டிங் ஆப் உருவாக்குகிறார். ஆனால் அந்த ஆப் சரியாக அமையாததால் காதல் பற்றி தெரிந்து வர மேலதிகாரி சொல்கிறார் .
மற்றொரு பக்கம் இயக்குநராக முயற்சிக்கும் நாயகி அர்ச்சனா ரவி ஒரு தயாரிப்பு நிறுவன பொறுப்பாளருக்கு காதல் கதையை சொல்கிறார். உணர்வுபூர்வமான காதல் கதையை கொண்டு வந்தால் படம் பண்ணலாம் என பொறுப்பாளர் சொல்வதால் தன்னுடைய கதைக்காக மொபைல் ஆப் முலம் சுதர்சன் கோவிந்தை பார்க்கிறார் .
இந்நிலையில் சுதர்சன் கோவிந்தை , அர்ச்சனா ரவி டேட்டிங் ஆப் மூலம் சந்தித்து பழக ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள்.
இச் சுழலில் ஒரு நாள் அர்ச்சனா ரவி சுதர்சன் கோவிந்தின் டேட்டிங் ஆப் அனைத்தையும் அவரது மொபைலில் அழித்து விட அர்ச்சனா ரவியுடன் பேச முடியாமல் மனமுடைந்து போகிறார் சுதர்சன் கோவிந்த் .
இந்நேரத்தில் ஓய்.ஜி. மகேந்திரன் சுதர்சன் கோவிந்திற்கு திருமணம் செய்து வைக்க பெண் விட்டாரை ஏற்பாடு செய்து தன் பேரனை ஊருக்கு வர சொல்கிறார் .
இறுதியில் நாயகன் சுதர்சன் கோவிந்த் அர்ச்சனா ரவியை மீண்டும் சந்தித்தாரா ? ஓய்.ஜி. மகேந்திரனின் விருப்பபடி அவர் நிச்சயிக்கும் திருமணம் செய்து கொண்டாரா ? இல்லையா? என்பதுதான்‘நீ FOREVER ’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சுதர்சன் கோவிந்த் துள்ளலான நடிப்பில் காதல், நடனம் , செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவி கதாபாத்திரத்துடன் இணைந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
கண்டிப்பு மிக்க தாத்தாவாக நடித்திருக்கும் ஓய்.ஜி. மகேந்திரன் அனுபவ நடிப்பால் கவர்கிறார்.
நாயகன் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி இவரது மனைவியாக வரும் நடிகை வித்யா பிரதோஷ் , நோபி ஜேம்ஸ், ஸ்ரீராம் ,ரித்திகா ஸ்ரீநிவாஸ் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமநாத் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது பின்னணி இசை படத்திற்கு பலம். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக உள்ளது.
புதுமையான காதல் கதையாக குடும்ப உறவுகளின் பின்னணியுடன் காதலர்களுக்கு காதலில் ஏற்படும் மாற்றங்களை திரைக்கதையில் அழுத்தமான சொல்வதுடன் அனைவரும் ரசிக்கும் உணர்வுபூர்வமான காதல் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி
ரேட்டிங்: 3 . 3 / 5





Comments