MediaTalks Logo
Header Advertisement
reviews
28 March 2026 at 23:01•1 Views

‘முத்து என்கிற காட்டான்’ - இணையத் தொடர் விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘முத்து என்கிற காட்டான்’ - இணையத் தொடர் விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் இயக்குநர் மணிகண்டன்  இயக்கத்தில்  ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர்

விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், பாலாஜி சக்திவேல் ,அபி நட்சத்திரா ஆகியோர் நடிப்பில்   ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி  வெளியாகிறது.

வனப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருடன் போலீஸ் கான்ஸ்டபிள்களாக சிங்கம்புலி, வடிவேல் முருகன் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர் .

அந்த ஊரில் குற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில் மேலிடம் அந்த காவல் நிலையத்தை மூட உத்தரவிடுகிறது .

இந்நிலையில் அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள பாறை மேல் விஜய் சேதுபதியின் வெட்டப்பட்ட தலை மட்டும் கிடக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வரும் சப் –இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலையை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள எங்கு தேடியும் விஜய் சேதுபதியின்உடல் கிடைக்காத நிலையில், ஒரு கடிதமும், ஒரு பையில் பணமும் போலீசாருக்கு கிடைக்கிறது .

இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கும் போலீஸ் மதுரை, கேரளா என பல்வேறு பகுதிகளில் தீவிரமாக விசாரணை செய்யும்போது கொலை செய்யப்பட்ட விஜய் சேதுபதியின் பெயர் முத்து என்பதை கண்டுபிடிக்கின்றனர் .

அடுத்த கட்ட நடவடிக்கையாக கொலை செய்யப்பட்ட விஜய் சேதுபதி யார் என்கிற விசாரணையில் இறங்கும் போலீஸுக்கு  விஜய் சேதுபதியின் பின்னணியை பற்றி அதிர்ச்சியடையும்படி பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது.

இறுதியில் விஜய் சேதுபதியின் உடல் போலீசுக்கு கிடைத்ததா? யார் இந்த விஜய்சேதுபதி ? அவர் நல்லவரா? கெட்டவரா ? விஜய் சேதுபதியை கொலை செய்து அவரது தலையை பாறை மேல் வைத்த மர்ம நபர் யார் ? என்பதுதான் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரின் மீதிக்கதை.

நாயகனாக முத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி இயல்பான நடிப்பில் நடன கலைக்குழுவின் பெண்களின் பாதுகாவலர் , கைக்கடிக்கார பழுது நீக்கும் கடை பணியாளர், யானை பாகன், ஆதரவற்றோர் இல்லத்தின் மேலாளர், சரக்கு வாகன ஓட்டுநர், ஹோட்டலில் வேலை பார்க்கும் வயதான ஊழியரை அதே ஹோட்டலுக்கு முதலாளியாக உட்கார வைக்கும் மனித நேயம் கொண்ட மனிதர் என யாரும் யூகிக்க முடியாத விதத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திர பின்னணியுடன் மிக சிறப்பான நடிப்பில் முத்து என்கிற கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.

போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் முத்துக்குமார் உடலை கண்டுபிடிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளில் பேசும் ரசிக்க வைக்கும் ஆங்கிலம் அவரது நடிப்பில் பாராட்டும்படி இருக்கிறது

காளை பாண்டியனாக போலீசாக நடித்திருக்கும் வடிவேல் முருகன் எதார்த்தமான நடிப்பில் ரசிக்க வைக்கிறார் .

இவரது மனைவியாக நடித்திருக்கும் பார்வதி கிராமத்து பெண்ணாக கதைக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.

சிங்கம் புலி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், பாலாஜி சக்திவேல் ,ரிஷா ஜேக்கப், அபி நட்சத்திரா என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.

மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரது ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

காட்டில் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள பாறை மேல் வைக்கப்பட்ட வெட்டப்பட்ட தலையை மையமாக கொண்ட கதையாக ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு ஆச்சரியங்களோடு சுவாரஸ்யமாக பயணிக்கும் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத வகையில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லருடன் அனைவரும் ரசிக்கும் பரபரப்பான இணையத் தொடராக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிகண்டன்.

மொத்தத்தில் ‘முத்து என்கிற காட்டான்’ மனித நேயமிக்க மாவீரன்

ரேட்டிங் : 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: