சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளாக கதையின் நாயகன் சரத்குமாரும் ,சுரேஷ் மேனனனும் ஒன்றாக வேலை செய்கின்றனர் .
இந்நிலையில் ஸ்மைல் மேன் எனும் மர்ம சைக்கோ கொலைகாரன் கொடுரமான முறையில் கொலைகளை செய்து வருகிறான் .
இவ்வழக்கை விசாரித்து அவனை கண்டுபிடித்து கைது செய்யும் பொறுப்பு மேலதிகாரிகள் சரத்குமார்,,சுரேஷ் மேனனனிடம் ஒப்படைக்கப்படுகிறது .
சில பிரச்சனைகளால் சரத்குமார் இவ்வழக்கிலிருந்து விலகிய பின் சுரேஷ் மேனன் சைக்கோ கொலைகாரன் என ஒருவனை சுட்டு கொன்று வழக்கை முடிக்கிறார் .
இதன் பின் பணிஓய்வு பெறும் சுரேஷ் மேனன் ஒரு நாள் மர்ம முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போகிறார் .
சில வருடங்களுக்கு பின் அடர்ந்த காட்டுப் பகுதியில் தலையில் அடிபட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்படும் சரத்குமார் இன்னும் ஒரு வருடத்தில் அனைத்து ஞாபகசக்தியையும் இழந்து விடுவார் என்று அவரை கவனிக்கும் டாக்டர் கூறுகிறார்.
2014 ஆண்டு சிகிச்சைக்கு பின் சரத்குமார் சிபிசிஐடி துறையில் பார்த்த, தீர்த்து வைத்த வழக்குகள் அனைத்தையும் புத்தகமாக எழுதி அதை வெளியிடுகிறார். அந்த புத்தகத்தில், தி ஸ்மைல் மேன் என்ற வழக்கு குறித்த தகவல் முழுமையாக எழுதாமல் இருக்கிறது.
இந்நேரத்தில் சைக்கோ கொலைகாரனான ஸ்மைல் மேன் மீண்டும் பல கொலைகள் செய்கிறான்.
இந்த வழக்கை சுரேஷ் மேனனின் மகன் ஸ்ரீகுமாரிடம் மேலிடம் கவனிக்க சொல்ல ,, இதே வேளையில் பல வருடங்களுக்கு முன் இதே ஸ்மைல் மேன் கொலைகாரன் வழக்கை விசாரித்த சரத்குமாரும் ஸ்ரீகுமாரோடு இணைந்து வழக்கை விசாரிக்கிறார்.
இருவரும் இவ்வழக்கை விசாரிக்கும் நிலையில் ஸ்மைல் மேன் கொலைகாரன் சரத்குமாருக்கு நெருக்கமானவர்களை ஒவ்வொருராக கொலை செய்கிறான்.. முடிவில் சரத்குமார் சைக்கோ கொலைகாரனான ஸ்மைல் மேன் யார் என்பதை கண்டு பிடித்தாரா?
என்ன காரணத்திற்காக கொடுரமான முறையில் கொலைகளை செய்கிறான் என்பதை சொல்லும் படம்தான்
‘தி ஸ்மைல் மேன்’
கதையின் நாயகனாக நடிக்கும் சரத்குமார் சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக கம்பீரமாகவும் விபத்திற்கு பின்னால் மறதியால் பாதிக்கப்பட்டவராகவும் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கும் கலையரசன் நடிப்பில் மிரட்டுகிறார் .
சிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் என படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்களுடன் பின்னணி இசையும், விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் அதிகாரிகளின் கதையை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைக்கதையுடன் க்ரைம் ரசிகர்கள் விரும்பும் படமாக ரசிக்கும்படி இயக்கியுள்ளனர் இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன்
ரேட்டிங் : 3 / 5
Comentários