MediaTalks Logo
Header Advertisement
reviews
3 April 2026 at 13:55•1 Views

’நீளிரா’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
’நீளிரா’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

இலங்கையில் நடந்த தமிழ் ஈழ போரின் பதற்றமான சுழ்நிலையில் அமைதியை நிலைநாட்ட இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட இந்திய அமைதி ராணுவ படை அமைதியை ஏற்படுத்தாமல் தமிழ் ஈழ போராளிகளின் ஆயுதங்களைக் கைப்பற்றி தமிழ் ஈழ மக்களை துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது ’ நீளிரா’

1988 ஆம் ஆண்டில் ஒரு கிராமத்தில் நடுத்தர குடும்ப வீட்டில் மறு நாள் நடைபெறும் திருமணத்திற்காக அந்த குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் முதல் நாள் இரவு போராளிகளை தேடி இந்திய அமைதி படை.

ராணுவம் அந்த வீட்டிற்குள் நுழைகிறது

மற்றொரு பக்கம் அவர்கள் வீட்டில் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள்.

இக்கட்டான சூழ்நிலையில் தாக்குவதற்கு தயாராகும் போராளிகள் மற்றொரு பக்கம் இந்திய அமைதி ராணுவப்படையால் போராட்டமான மரணப் பயத்தில் சிக்கிக்கொள்ளும் திருமண வீட்டார்

.

இறுதியில் இந்திய அமைதி ராணுவப் படையின் பிடியில் சிக்கிய திருமண விட்டாரை போராளிகள் காப்பாற்றினார்களா ? மறு நாள் திட்டமிட்டபடி திருமணத்தை மகிழ்ச்சியாக திருமண வீட்டார் நடத்தினார்களா ? என்பதை சொல்லும் படம்தான்’ நீளிரா’

இந்திய அமைதிப்படையின் கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்

போராளிப் படையின் கேப்டனாக நடித்திருக்கும் சனத் உணர்வுபூர்வமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .

ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் என அனைவரும் ஈழ பெண்களாக பயம் கலந்த பதற்றமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுதியுள்ளனர் .

நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகியோர் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக உள்ளனர்

இசையமைப்பாளர் கே வின் இசையும் ,ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அமைதியை காக்க சென்ற இந்திய ராணுவ வீரர்களின் அத்துமீறலில் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் கதையை மையமாக வைத்து விறு விறு ப்புடன் பதற்றமான திரைக்கதை அமைப்பில் ஈழ மக்களின் மன வலியை அழுத்தமாக சொல்வதுடன் உணர்வுபூர்வமான கதையுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சோமிதரன் .

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: