MediaTalks Logo
Header Advertisement
reviews
5 April 2026 at 16:20•1 Views

’கார்மேனி செல்வம்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
’கார்மேனி செல்வம்’ -  விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

சென்னையில் கெளதம் வாசுதேவ் மேனனிடம் கார் டிரைவராக வேலை பார்க்கும் சமுத்திரக்கனி மனைவி லட்சுமி பிரியா மற்றும் மகனுடன் கடற்கரை அருகே வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். வசதி படைத்த கௌதம் மேனனின் மனைவி அபிநயாவிடம் சகோதரராக பழகும் சமுத்திரக்கனியை கெளதம் வாசுதேவ் மேனன் கார் டிரைவராக பார்க்காமல் தன் குடும்பத்தில் ஒருவராக அவரை பார்க்கிறார் .

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் தனது குடும்பத்துடன் ஒரு மாதம் வெளிநாடு செல்லும்போது தன்னுடைய காரை சமுத்திரக்கனியிடம் கொடுத்து திரும்பி வரும் வரை காரை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்கிறார்.

இதனையடுத்து சொந்தமாக வீடு வாங்குவதற்காக சமுத்திரக்கனி , கௌதம் வாசுதேவ் மேனனுக்குத் தெரியாமல் அவரது காரை கால் டாக் ஸியாக மாற்றி தேவையான பணத்தை சம்பாதித்து வருகிறார். சில நேரங்களில் கடன் நிறைய வாங்கும் சூழ்நிலை ஏற்பட குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வருகிறது.

இச் சுழலில் கௌதம் வாசுதேவ் மேனனின் கார் விபத்தில் மாட்டிக் கொள்ள அதை சரி செய்ய லட்சக்கணக்கில் சமுத்திரக்கனிக்கு பணம் தேவைப்படுகிறது.

இக் கட்டான நிலையில் சிக்கி கொள்ளும் சமுத்திரக்கனி விபத்தில் சிக்கிய காரை சரி செய்தாரா? வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த அவர் என்ன செய்தார் ? என்பதுதான் ’கார்மேனி செல்வம்’ படத்தின் மீதிக்கதை.

செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி உணர்வுப்பூர்வமான நடிப்பில் அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமுத்திரக்கனி மனைவியாக நடித்திருக்கும்  லட்சுமி பிரியா சந்திரமெளலி நடுத்தர வர்க்க குடும்ப பெண்ணாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார

சமுத்திரக்கனியின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் ,

அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

மியூசிக்லவ்டு ஸ்டுடியோ அண்ட் டெக்னாலஜி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்‌ஷன் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது

கடனால் ஏற்படும் நிம்மதியில்லாத வாழ்க்கையை மையமாக கொண்ட கதையுடன் பிறரை போல ஆடம்பரமாக வாழ நினைப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை அழுத்தமாக சொல்வதுடன் உணர்வுபூர்வமான திரைக்கதை அமைப்பில் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம் சக்ரி.

ரேட்டிங் - 3 . 2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: