MediaTalks Logo
Header Advertisement
reviews
13 April 2026 at 00:05•1 Views

‘மனிதன் தெய்வமாகலாம்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘மனிதன் தெய்வமாகலாம்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

விஜயா சதீஷ் தயாரிப்பில் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில்  செல்வராகவன், குஷி ரவி, ஆர்.எஸ்.சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன், லிர்திகா, சேலம் தீபக் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ .

சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்வயல் கிராமத்தில் வசிக்கும் செல்வராகவன் அக்கா கௌசல்யாவின் கணவருடன் சேர்ந்து நுங்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பெரியவர் ஒருவர் ஆளுங்கட்சி எம் எல் ஏ ஒய்.ஜி.மகேந்திரனிடம் மனு ஒன்றை கொடுக்கிறார்.

இந்நிலையில் திருமணம் ஆகாமல் இருக்கும் செல்வராகவனுக்கும் நாயகி குஷி ரவிக்கும் திருமணம் நடக்கிறது.

தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்ட குஷி ரவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பலரிடம் கடன் வாங்கி ஒரு நெடுஞ்சாலையில் ஒரு சிறிய உணவகத்தை ஆரம்பிக்கிறார். உணவகமும் நன்றாக செயல்பட்டு நிறைவான லாபத்தில் இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.

இச் சுழலில் எம் எல் ஏ ஒய்.ஜி.மகேந்திரனின் மைத்துனர் மைம் கோபி தொழில் சாலை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வேலை பார்க்கும் ஏழை பெண்களுக்கு பணத்தை வட்டிக்கு கொடுத்து அதை திருப்பி செலுத்தாத முடியாத பெண்களை பலவந்தபடுத்தி கற்பழித்து விடுகிறார். இந்நிலையில் சாலை வசதி சரி இல்லாததால் செல்வராகவன் வீட்டின் அருகே இருக்கும் பள்ளியில் படிக்கும் சிறுமி இறக்கிறார்.

இதனையடுத்து செல்வராகவன், பெரியவருடன் சென்று எம் எல் ஏ ஒய்.ஜி.மகேந்திரனை பார்த்து மனு கொடுக்கிறார். மனுவை பார்க்கும் ஒய்.ஜி.மகேந்திரன் சாலை போட அரசிடம் ஒப்புதல் வாங்கியும் அதற்கான வேலையை மைம் கோபி செய்யாததால் ஆத்திரத்தில் மைம் கோபியை அனைவரது முன்னிலையில் கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

இதனால் மைம் கோபிக்கும் செல்வராகவனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் செல்வராகவன் மனைவி குஷி ரவி கர்ப்பம் அடைகிறார்.

செல்வராகவன் சந்தோசமாக இருக்கும் நேரத்தில் திடீர் என

செல்வராகவன் மனைவி குஷி ரவி தற்கொலை செய்து கொள்கிறார்.

இறுதியில் என்ன காரணத்திற்காக கர்ப்பமாக இருக்கும் செல்வராகவன் மனைவி குஷி ரவி தற்கொலை செய்து கொண்டார் ? குஷி ரவியின் தற்கொலைக்கு காரணமான மர்ம நபர் யார் என்பதை செல்வராகவன் கண்டுபிடித்தாரா ? என்பதுதான் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் செல்வராகவன் இயல்பான நடிப்பில் எளிய கிராமத்து மனிதராக தங்கை மகளான சிறுமி மீது கொண்ட பாசம் . மனைவி மீது காட்டும் அன்பு, 50 ஆயிரம் ரூபாய் தேவை என்றதும் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு எதற்கு என்று கேள்வி கேட்காத குணம், இறுதியில் அமைதியாக இருப்பவர் காட்டும் ஆக்ரோஷமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி ரவி, அழகு , நடிப்பு, திறமை என குடும்ப பெண்ணாக அனைவரின் கவனத்தை கவர்கிறார்.

செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கும் கெளசல்யா அவரது கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்

நேர்மையான அரசியல் தலைவராக எம் எல் ஏ வாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் கந்துவட்டி கொடுப்பவராக நடித்திருக்கும் மைம் கோபி கொடூர குணம் கொண்ட கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார்

சிறுமி லிர்திகா, சேலம் தீபக் என படத்தில் மற்ற கதாபத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார்.

அடிப்படை வசதியான சாலை, பஸ் போக்குவரத்து இல்லாத கிராமத்தை மையமாக கொண்ட கதையுடன் கந்துவட்டி கொடுமை, பாலியல் தீண்டல், கணவன் – மனைவி புரிதல் என அனைத்தும் கலந்த திரைக்கதை அமைப்பில் இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்,

மொத்தத்தில் ‘மனிதன் தெய்வமாகலாம்’ – மனிதனில் புனிதன்

ரேட்டிங் : 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: