‘எக்ஸாம்’ (Exam) இணைய தொடர் - விமர்சனம்
- mediatalks001
- 3 days ago
- 2 min read

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் இயக்கத்தில் ‘எக்ஸாம்’ (Exam) இணைய தொடர்
துஷாரா விஜயன்,அதிதி பாலன், அப்பாஸ், வசுந்தரா மற்றும் நரேன்மணி ,பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஆகியோர் நடித்துள்ளனர் .
காவல் துறையில் துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் அதிதி பாலன் மேலிடத்தால் தைகாரா மலை கிராமத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டு தன்னுடைய ஐந்து வயது மகளை தன் அம்மாவிடம் விட்டுவிட்டு அதிதி பாலன் மட்டும் அந்த ஊருக்கு காரில் செல்கிறார்.
அதிதி பாலன் காரில் அந்த ஊருக்கு செல்லும் வழியில் காருக்குள் அவருக்கு தெரியாமல் இருக்கும் துஷாரா விஜயன் அதிதி பாலனை கடத்தி சென்று விடுகிறார்.
அதிதி பாலனை தன் வீட்டில் ஒரு தனி அறையில் சங்கிலியால் கட்டி போட்டு விட்டு ஆள் மாறாட்டம் செய்து காவல் உடையில் அதிதி பாலனுக்கு பதிலாக தான்தான் துணை காவல் கண்காணிப்பாளர் என புதிய அதிகாரியாக பொறுப்பேற்று அங்குள்ள காவல் நிலையத்தில் தன் பணியை தொடங்குகிறார் .
துஷாரா விஜயனுக்கு ஜெயிலராக இருந்த அப்பாஸ் மறைமுகமாக உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் அரசாங்கம் நடத்தும் உயர் அதிகாரிகள் பணிகளுக்கான போட்டி எழுத்து தேர்வு தைக்காராவில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற இருப்பதால் அந்த தேர்வு மையத்தில் முறைகேடு நடக்கவிருப்பதாக ரகசிய தகவல்கள் துஷாரா விஜயனுக்கு கிடைக்கிறது.
இச் சுழலில் அந்த மலைக் கிராமத்தில் உள்ள அரசாங்க பணிக்கான தேர்வு பயிற்சி மையங்களில் சென்று விசாரணையை தொடங்கும்போது அங்கு அரசாங்க பணிக்கான தேர்வில் பல வித மோசடிகள் நடப்பதை கண்டுபிடித்து அதனை ஒழிக்க திட்டமிடுகிறார் துஷாரா விஜயன் .
இதனையடுத்து இந்த மோசடி முறைகேட்டின் பின்னணியில் உள்ள மர்ம நபர்களை கண்டுபிடிக்க துஷாரா விஜயன் தீவிரமாக இருக்கும்போது அவரது பாதுகாப்பில் இருக்கும் அதிதி பாலன் அவரிடமிருந்து தப்பிச் செல்கிறார்.
இறுதியில் எதற்காக துணை காவல் கண்காணிப்பாளராக இருக்கும் அதிதி பாலனை கடத்தி துஷாரா விஜயன் தன் பாதுக்காப்பில் வைத்திருந்தார் ? யார் இந்த துஷாரா விஜயன் ? அரசாங்க பணிக்கான தேர்வின் மோசடி முறைகேடுகளை துஷாரா விஜயன் கண்டுபிடிப்பதற்கான காரணம் என்ன ? என்பதை சொல்லும் இணைய தொடர்தான் ‘எக்ஸாம்’ (Exam)
கதையின் நாயகியாக ஜான்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் இயல்பான நடிப்பால் கிராமத்து அப்பாவி ஏழை பெண்ணாக படிப்பு ,தைரியம் , கோபம் , தவிப்பு என ஆக்ஷனுடன் சேர்ந்து அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மரமல்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன் எதிர் மறை குணம் கொண்டவராக பணத்திற்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் .
ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்பாஸ் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார் . சிறப்பான நடிப்பில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், வசுந்தரா மற்றும் நரேன்மணி என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது .
ஒளிப்பதிவாளர்அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.
அரசாங்க உயர் பதவிக்கான தேர்வில் நடைபெறும் மோசடியான முறைகேடுகளை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் நன்றாக படிக்கும் நடுத்தர மாணவர்களின் நிலை பணக்கார வர்க்கத்தினால் முடக்கப்படுவதை அழுத்தமாக சொல்வதுடன் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு அத்தியாயங்கள் முடியும்போது ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும் அடுத்தடுத்த அத்தியாயங்களுடன் ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் இணைய தொடராக இயக்கியுள்ளார் இயக்குநர் A.சற்குணம்
மொத்தத்தில் - ‘எக்ஸாம்’ (Exam) இணைய தொடர் – அறிவில் சிறந்த நடுத்தர மாணவர்களின் வலி
ரேட்டிங் : 3.5 / 5





Comments