‘அந்தரன்’ - விமர்சனம்
- mediatalks001
- 1 day ago
- 2 min read

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் எம் கே சாம்பசிவம் தயாரிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் ‘அந்தரன்’
பிரஜின், இவானா வருண் அதிரன், எம் கே சாம்பசிவம், அனுபமா குமார், செந்தில் குமாரி , பத்மன் ஆகியோர் நடித்துள்ளனர் .
சென்னையில் வசிக்கும் நாயகி இவானா வருணை காதலிக்கும் மாணவனை இவானா வருணின் தந்தை எம் கே சாம்பசிவம் அடித்து ஊரை விட்டு அவனது குடும்பத்துடன் விரட்டி அடிக்கிறார்.
சில வருடங்களுக்குப் பிறகு இவானா வருண் ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலிக்கிறார். அவரை திருமணம் செய்ய நினைக்கும் போது அந்த நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலால் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. நிச்சயம் முடிந்த நிலையில் இவானாவின் வருங்கால கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். அவரை தொடர்ந்து இவானா வருணுக்கு மீண்டும் திருமண ஏற்பாடு நடக்க, அவரும் லாரி விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.
இவானா வருணை திருமணம் செய்ய வருகிற ஆண்கள் ஒவ்வொருவரும் மர்ம நபரால் கொலை செய்ய ப்படுகிறார்கள்.
.
இந்த தொடர்ச்சியான மர்ம கொலைகளை விசாரிப்பதற்காக மேலிடத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரஜின் நியமிக்கப்படுகிறார் .
ஒரு கட்டத்தில் இவானா வருண் மீது பிரஜினுக்கு காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.
இறுதியில் தொடர் கொலைகளை செய்த மர்ம கொலையாளியை பிரஜின் கண்டுபிடித்தாரா ?
இவானா வருண் மீது காதல் கொண்ட பிரஜின் அவரை திருமணம் செய்து கொண்டாரா ?இல்லையா ? என்பதுதான் ‘அந்தரன்’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கும் பிரஜின் காதல், செண்டிமெண்ட் என சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் அழகான இவானா வருண் அழுத்தமான கதாபாத்திரத்தில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும்எம் கே சாம்பசிவம் , அனுபமா குமார், பத்மன் , செந்தில்குமாரி, பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஹரி ஆர்.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் படத்திற்கு பக்க பலமாக உள்ளது .
ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
தொடர் கொலைகளை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை கொலையாளி யார் ? என்பதை யாரும் யூகிக்க முடியாத வகையில்,, எதிர்பாராத திருப்பத்தோடு கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கான பரபரப்புடன் அனைவரும் ரசிக்கும் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராவணன்
மொத்தத்தில் ‘அந்தரன்’ – பாராட்டப்படும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்
ரேட்டிங் : 3 / 5





Comments