யாருக்கும் பயப்படாத தைரியமான நேர்மையான இன்ஸ்பெக்டரான கிச்சா சுதீப் மேலிடத்தின் முலம் இன்ஸ்பெக்டராக வேறு ஒரு காவல் நிலையத்திற்கு மாற்றப் படுகிறார்.
மறுநாள் காலையில் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக
பொறுப்பேற்றுக்கொள்ள இரவு தன் அம்மாவுடன் அந்த ஊருக்கு வருகிறார் .
அதே நாள் இரவில், காவலர்களுடன் இரவு ரோந்து பணியில் இருக்கும் பெண் போலீஸ் மீது அத்துமீறிய அமைச்சரின் மகன்களான இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறார் கிச்சா சுதீப் .
அமைச்சர்களுக்கு பயப்படும் சக காவலர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்களை வெளியே விட மறுக்கிறார் கிச்சா சுதீப்.
அவர் அங்கிருந்த சென்ற சில நிமிடங்களிலேயே இரண்டு இளைஞர்களும் ஜெயிலுக்குள் இறந்து கிடக்கிறார்கள்.
அமைச்சர் மகன்களை கொன்றது யார்? என்று தெரியாமல் கிச்சா சுதீப்பும் விழி பிதுங்கி நிற்கிறார்.
இதனையடுத்து அமைச்சர் மகன்களை கைது செய்து அவர்கள் காவல் நிலையத்தில் இருக்கும் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கிறது .
ஊரில் உள்ள மிக பெரிய ரவுடிகள் அத்தனை பேரும் பயங்கர ஆயுதங்களுடன் அமைச்சர் மகன்களை வெளியே கொண்டு வர காவல் நிலையத்தில் கலவரம் செய்கின்றனர் .
காவல் நிலைய இன்ஸ்பெக்டரான கிச்சா சுதீப் ரவுடிகள் அனைவரையும் அடித்து ஓட விடுகிறார் .
முடிவில் காவலில் இருந்த அமைச்சர் மகன்களை யார் கொலை செய்தார்கள் ?
பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வந்த அமைச்சரின் அடியாட்களிடமிருந்து காவலர்களை நாயகன் கிச்சா சுதீப் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’மேக்ஸ்’
அதிரடி ஆக்க்ஷன் நாயகனாக நேர்மையான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கிச்சா சுதீப் இயல்பான நடிப்புடன் ஆக்க்ஷன் சண்டைக் காட்சிகளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் .
வழக்கமான வில்லி கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார்
அமைச்சர்களாக வரும் லோகிதாஸ்வா, ஆடுகளம் நரேன் ,வில்லன்களாக வரும் சுனில், , வம்சி கிருஷ்ணா, போலீசாக வரும் இளவரசு, சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் .
அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்களும் ,
பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்.
சேகர் சந்திரா ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக அழகாக படமாக்கியிருக்கிறார்.
முழுக்க ஆக்க்ஷனை மட்டுமே கதையாக கொண்டு அனைத்து காட்சிகளும் கதையுடன் பயணிக்கும் வேகத்துடன் ரசிகர்கள் ரசிக்கும்படி பக்கா கமர்ஷியல் அதிரடி ஆக்க்ஷன்படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா .
மதிப்பீடு : 3 / 5
Comments