‘அருள்வான்’ - விமர்சனம்
- mediatalks001
- 11 hours ago
- 2 min read

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் ‘அருள்வான் ’
அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர் .
பழங்குடியின மக்கள் வாழும் பூங்குடி மலைகிராமப் பகுதியில் மலை உச்சிகளில் இருந்து தேன் எடுக்கும் தொழில் செய்பவரான ஆரவ் தனது மனைவி ரம்யா பாண்டியன் மற்றும் மகள் கிருத்திகாவுடன் வாழ்ந்து வருகிறார்.
இயற்கை எழில் சூழ்ந்த அந்த மலை பகுதியில் வனத் துறை அதிகாரியாக இருக்கும் ஜான் விஜய் வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாக அவர்களின் கைக்கூலியாக செயல்படுகிறார்.
ஜான் விஜய்யின் கொடுரமான நடவடிக்கைகளை ஆரவ் எதிர்ப்பதால், இருவருக்கும் மோதல் உருவாகிறது.
மலைக் கிராமத்தில் கல்வி வசதி இல்லாததால், கிராம மக்கள் பள்ளிக்குச் செல்ல பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.
இச் சுழலில் கிராம மக்களை வெளியேற்ற சதி செய்யும் ஜான் விஜய் ஊர் தலைவராக இருக்கும் ஆரவ்வின் மாமாவிடம் வெற்றுக் காகிதத்தில் கைரேகை வாங்கி, மலைவாழ் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மிரட்டுகிறார் .
ஜான் விஜய்யின் சதியால் மனவேதனை அடைந்த ஆரவ்வின் மாமா, தனது கட்டைவிரலை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நீ நன்றாக படித்து எழுத படிக்க கற்று கொள் என்னை போல இனி யாரும் ஏமாறக் கூடாது என மனமுடைந்து தன்
பேத்தியான கிருத்திகாவிடம் கூ றுகிறார்
இந்நிலையில் தனது மகள் கிருத்திகாவை எப்படியாவது படிக்க வைப்பேன் என்று ஆரவ் உறுதி எடுக்கிறார்.
இதே சமயம் பக்கத்து கிராமத்தில் உள்ள பள்ளி ஆசிரியை வினோதினியை சந்திக்கும் கிருத்திகாவிடம், உங்கள் கிராமத்திற்கு பள்ளி வர
வேண்டுமெனில், கிராம மக்கள் கலெக்டரைச் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என்று அவரிடம் கூறுகிறார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு,கிராம மக்களை ஒன்றிணைத்து கலெக்டரைச் சந்திக்க ஆரவ் முடிவு செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் கிருத்திகா பருவமடைகிறார்.
இதனால் ஒரு வாரம் கிராமத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது; மேலும் உடனடியாக அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பதும் அந்த சமூகத்தின் பழக்கமாக உள்ளது.
கல்விக்காக இந்தக் கட்டுப்பாடுகளை மீறி, கலெக்டரைச் சந்திக்கச் செல்லும் கிருத்திகா பல பிரச்சனைகளில் சிக்கி தப்பிக்கும்போது வழியில் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இந்நிலையில் கல்வி பெற வேண்டி போராடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருத்திகாவை தேனி மாவட்ட ஆட்சியரான அருள்நிதி சந்திக்கிறார் .
முடிவில் கலெக்டர் அருள்நிதியை சந்தித்த கிருத்திகா குணமடைந்து தனது கிராமத்திற்கு கல்வி வசதி பெற்றுத் தந்தாரா? தன் கனவான கல்வியை பயின்றதால் கிருத்திகாவின் நிலை என்ன ? என்பதுதான் ‘அருள்வான்’ படத்தின் மீதிக்கதை.
தேனி மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் அருள்நிதி, அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான இயல்பான நடிப்பில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முள் வேலிகளை அகற்றும் காட்சிகளிலும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுக்கும் தைரியமான முடிவில் எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மன உறுதியோடு உணர்வுபூர்வமான சிறப்பான நடிப்பில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடிக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஆரவ் மலைவாழ் மக்களின் தோழனாக சிறப்பான நடிப்பில் மனைவி மீதான பாசம், மகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் போராட்டம், தவறு செய்யும் வன அதிகாரியை எதிர்த்துப் போராடும் காட்சிகள் என அனைத்திலும் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
ஆரவ்வின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், மலைவாழ் கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு முழுமையாகப் பொருந்தியிருக்கிறார்.
படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருத்திகா, கல்வி கற்கத் துடிக்கும் சிறுமியாக தனது இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரமாக வாழ்கிறார் .
கொடூர குணம் கொண்ட வனத்துறை அதிகாரியாக வரும் ஜான் விஜய், பத்திரிகையாளராக நடித்திருக்கும் காளி வெங்கட், வனத்துறை மேலிட அதிகாரியாக நடித்திருக்கும் ‘பருத்திவீரன்’ சரவணன், விடிவி கணேஷ், ஹரிஷ் உத்தமன்,அருள்தாஸ் உள்ளிட்ட அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் ஒளிப்பதிவு மலைகள், அருவிகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை எழிலை கண்முன் நிறுத்தி ரசிக்க வைக்கிறார்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி கற்பதன் அவசியத்தை அழுத்தமாக சொல்லும் கதையமைப்புடன் பல தடை வந்தாலும் போராடும் ஒரு பெண்ணின் குணம் அதில் மனிதநேயத்துடன் சமூகப் பொறுப்புள்ள ஒரு அதிகாரியின் செயல் ,கல்வியின் முக்கியத்துவம் என அனைத்தும் கலந்த திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி பாராட்டப்படும் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் கணேஷ் விநாயகன்
மொத்தத்தில் ‘அருள்வான் ’ – மனித நேய பண்பாளன்
ரேட்டிங் : 4 / 5





Comments