top of page

'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' இணையத் தொடர் - விமர்சனம்

  • mediatalks001
  • 2 days ago
  • 2 min read

வால்வாட்ச்சர் பிலிம்ஸ் – கவுதம் செல்வராஜ், எஸ்.குகாபிரியா, எஸ்.நந்தகுமார் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' இணையத் தொடர்


சசிகுமார், யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்


மதுரை மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சி ஒன்றை நடத்த பள்ளம் தோண்டும் போது மனித எலும்புக்கூடு ஒன்று அந்த பள்ளத்தில் கிடைக்கிறது.

அரசு நிகழ்ச்சியின் இடையே நிகழ்ந்த இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த ஊடகமும் அந்த மர்ம சம்பவத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க, மண்ணில் புதைக்கப்பட்ட மர்மமான எலும்புக்கூட்டின் பின்னணியை கண்டுபிடிக்கும் பொறுப்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாரிடம் மேலிடம் ஒப்படைக்கிறது.


இந்நிலையில் எந்த ஆதாரமும் இல்லாத  சிதைந்த நிலையில் கிடைத்த எலும்புக்கூட்டை வைத்து விசாரணையை தொடங்கும் சசிகுமார், அதே பகுதியில் மேலும் ஒரு எலும்புக்கூடு இருப்பதை கண்டுபிடிக்கிறார்.


அடுத்த கட்ட நடவடிக்கையாக தீவிர விசாரணையில் இறங்கும் சசிகுமார் தொடர்ந்து, அந்த இரு எலும்புக்கூடுகளும் பெண்களுடையது என்றும், அவர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் என கண்டறிவதுடன் எலும்புக்கூடு வழக்கின் பின்னணியில் உள்ள மர்மங்களுடன் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள் யார் ? அவர்களை கொலை செய்த உண்மை குற்றவாளி யார் ? என்பதையும் கண்டுபிடிக்க அதிரடியாய் களத்தில் இறங்குகிறார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் .


இறுதியில் சசிகுமாரின் புலனாய்வில் பல மர்மங்கள் வெளிப்படுவதுடன் கொலைகளுக்கான பின்னணியுடன் உண்மை கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்தாரா ? இல்லையா ? என்பதுதான்'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' இணைய தொடரின் மீதிக்கதை.


மூசா ராசா என்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், முதன் முறையாக காவல்துறை அதிகாரி வேடத்தில் அமைதியாக இயல்பான நடிப்பில் உணர்வுபூர்வமாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .


மதுரை மாவட்ட எஸ்.பி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனகா உடல் மொழியில் காவல்துறை உயர் அதிகாரியாக கம்பீரமான தோற்றம்,நடை , உடை, மற்றும் நடிப்பு என அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.


முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அறிமுக நடிகர் யஷ்வந்த் துள்ளலான நடிப்பில் மாடு பிடிக்கும் காட்சிகள், நண்பர்களுடனான தருணங்கள், காதல் காட்சிகள் என மதுரை மாவட்ட இளைஞராக நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.


சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா தாஸ், முடக்கத்தான் மணியின் காதலியாக நடித்துள்ள ரேவதி மற்றும் ‘வதந்தி’ முதல் சீசனில் நடித்த கதாபாத்திரத்தை தொடர்ந்து வரும்  விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.


இசையமைப்பாளர் சைமன் கே. கிங்கின் பின்னணி இசை தொடரின் பரபரப்பையும் மர்ம உணர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் சிறப்பாக உள்ளது .

சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .


கொலை குற்றவாளியை நிரபராதி என நிரூபிக்க போராடும் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் பயணத்தை மையமாக கொண்ட கதையுடன் ஒவ்வொரு அத்தியாயங்களும் எதிர்பாராத ஒரு சம்பவத்தின் மூலம் அடுத்தது என்ன நடக்கும் ? , கொலையாளி யார் ? என்ற கேள்விகளை பார்வையாளர்களின் மனதில் யுகங்களை உருவாக்குவதுடன் ரசிக்க வைக்கும் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் தொடராக எழுதி இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ்


மொத்தத்தில் ‘வதந்தி – சீசன் 2’ – மர்மங்கள் நிறைந்த ரசிக்க வைக்கும் க்ரைம் திரில்லர் தொடர்


ரேட்டிங் : 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page