top of page

‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 17 hours ago
  • 2 min read

ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் வழங்கும் சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்  & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’


சூர்யா,மமிதா பைஜு, ராதிகா சரத்குமார்,ரவீனா டாண்டன் , ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்துள்ளனர் .


இந்திய ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மிகப்பெரிய தொழிலதிபரான நாயகன் சூர்யா தன் வாழ்க்கையில் திருமணம் மட்டும் செய்துக் கொள்ளக் கூடாது, என்பதில் பிடிவாதமாக இருக்கும் நிலையில் நாற்பது வயதை கடந்த சூர்யா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டால் தன் குடும்பத்திற்கு வாரிசு இல்லாமல் போகும் கவலையில் இருக்கிறார்  ராதிகா சரத்குமார்


இந்நிலையில் ராதிகா சரத்குமாரின் ஆசைப்பட்டபடி குடும்ப வாரிசுக்காக யாரென்று தெரியாத மேல் நாட்டில் வசிக்கும் வாடகைத்தாய் மமிதா பைஜு மூலம் சூர்யா குழந்தை பெற்றுக் கொள்கிறார்.


சூர்யாவின் இந்த நடவடிக்கை ராதிகா சரத்குமாருக்கு அதிர்ச்சியளித்தாலும், கொஞ்சி விளையாடவும், குடும்பத்தின் பெயர் சொல்லவும் ஒரு குழந்தை வாரிசாக வந்துவிட்டது என்று மகிழ்ச்சியடைகிறார்.


சில நாட்களுக்கு பிறகு குழந்தையின் உயிருக்கு திடீரென்று ஆபத்து ஏற்படுகிறது. குழந்தையின் தாயானமமிதா பைஜு வந்தால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூற,, ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக வாடகைத்தாய் மமிதா பைஜுவை தேடி செல்லும் சூர்யா, அது தன்னை விட 20 வயது குறைவான மமிதா பைஜு தான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைகிறார்.


குழந்தையின் நிலையை சொல்லி அவரை அழைக்கும் போது, மருத்துவ படிப்பிற்காக பணம் தேவைப் பட அதற்காக வாடகைத்தாயாக மாறிய மமிதா பைஜு, அதே பணத்திற்காக குழந்தையை காப்பாற்ற சூர்யாவுடன் பயணிக்கிறார்.


தான் பெற்ற குழந்தையுடன் சூர்யாவின் பணியாட்களின் பாசமான பழகுதலுடன் ராதிகா சரத்குமாரின் அன்பில் அடிமையான மமிதா பைஜு நாளடைவில் சூர்யாவையும் காதலிக்க தொடங்குகிறார்.


குழந்தை குணமான பிறகு மமிதா பைஜுவை அவரது நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை சூர்யா செய்யும்போது ராதிகா சரத்குமார் மமிதா பைஜுவை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டு சூர்யாவை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தும்போது தன் தந்தையான ராஜீவ் மேனன் செய்த செயலால் வயது வித்தியாசத்தை காரணம் காட்டி மமிதா பைஜுவின் காதலை நிராகரிக்கிறார் சூர்யா .


இறுதியில் மமிதா பைஜுவின் காதலை சூர்யா ஏற்றுக் கொண்டாரா ? சூர்யா திருமணத்தை வெறுப்பதற்கான காரணம் என்ன ? என காதல் மற்றும் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களை மிக இயல்பாக சொல்லும் படம்தான் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’.


சஞ்சு விஸ்வநாத் என்ற தொழிலதிபர் கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷாக நடித்திருக்கும் சூர்யா வயதில் தன்னை விட குறைவான பெண்ணின் காதலை ஏற்க மறுப்பது, திருமணத்தின் மீதான வெறுப்பு , அம்மாவின் மீது கொண்ட அன்பான பாசம் , என நேர்த்தியாக இயல்பான நடிப்பில் உணர்வுபூர்வமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, இளமை துள்ளலுடன் துறு துறு நடிப்பால் அனைத்துவிதமான உணர்வுகளின் அழகுடன் மகிழ்ச்சி, சோகம், காதல், வெட்கம் என ரசிக்கும்படியான நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக படம் முழுவதும் நடிப்பில் ஜொலிக்கிறார் .


சூர்யாவின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார் அனுபவ நடிப்பில் தன் முத்திரையை பதிக்கிறார் .


ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, ராஜீவ் மேனன்,ஜார்ஜ் மரியான் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி காட்சிகளை மிக அழகாகவும் , பிரம்மாண்டமாகவும் நேர்த்தியான ஒளிப்பதிவில் தன் திறமையை நிருப்பித்துள்ளார் .


ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்களுடன், பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .


திருமணத்தை வெறுக்கும் நாயகனின் கதையுடன் மேல்வர்க்க மக்களின் பிரமிக்க வைக்கும் குடும்ப பின்னணியோடு கதையோடு பயணிக்கும் அழகான நகைக் சுவையுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமான விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் விதமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி


மொத்தத்தில், ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ பார்வையாளர்கள் பாராட்டும் குடும்ப படைப்பு



ரேட்டிங் - 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page