MediaTalks Logo
Header Advertisement
reviews
16 August 2026 at 21:55•1 Views

‘மகுடம்’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘மகுடம்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

விசாகப்பட்டின துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிகப்பெரிய தாதாவான விஷாலின் மகன் மற்றொரு விஷால். தந்தை விஷாலுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் சாதாரண வேலையான மருந்துவிற்பனை பிரதிநிதியாக 17,500 ரூபாய் சம்பளத்தில் நடுத்தர வாழ்வு வாழும் விஷாலுக்கு எப்படியாவது ஒரு கார் வாங்கி விட வேண்டும் என்பது லட்சியம். விஷாலின் மனைவியான துஷாரா விஜயனின் தந்தையான தம்பி ராமையாவின் ஆசையும் அதுதான் .

புதிய கார் என்றால் தனது பட்ஜெட் தாங்காது என்பதை உணரும் விஷால், பழைய கார் ஒன்றை வாங்குகிறார்.

இந்தக் காரில் மகிழ்ச்சியாக மனைவியையும் மகன் மகளையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்யும் போது எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு மனைவியான துஷாரா விஜயனையும் , மகளையும் பறிகொடுக்கிறார்.

விஷால் வாங்கியது மிக பெரிய தாதாவின் பழைய காரை. அந்தக் கார் விற்கப்பட்டது தெரியாமல் காரின் நம்பரை கண்டதும் தாதாவை துவம்சம் செய்வதாக நினைத்து விஷாலின் மனைவியான துஷாரா விஜயனையும் , மகளையும் எதிரிகள் கொலை செய்கின்றனர் .

இந்நிலையில் மகன் விஷாலின் வெறித்தனமான கோபம் தந்தை விஷாலின் மீது திரும்புகிறது. தாய் அஞ்சலி கொல்லப் பட்டதால் தான் அனாதை ஆக்கப்படவும் தந்தை தான் காரணம் என்ற கோபத்தை மனதுக்குள் நெருப்பாக அடக்கி வைத்திருந்த மகன், இப்போது மனைவி மகளின் இறுதி சடங்குக்கு வரும் தனது தந்தை விஷாலை வெறுத்து திட்டி அனுப்புகிறார்.

இறுதியில் தந்தை விஷாலின் அன்பை புரிந்து கொண்டு மீண்டும் அவருடன் மகன் விஷால் இணைந்தாரா ?

மகன் விஷாலின் மனைவி ,மகளை கொன்ற எதிரிகளை தந்தை விஷால் பழி தீர்த்தாரா ? இல்லையா? என்பதுதான் ‘மகுடம்’ படத்தின் மீதி கதை .

அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கும் விஷாலின் மருந்து விற்பனை பிரதிநிதி கதாபாத்திரம் நடிப்பில் குறையில்லை அப்பா கதாபாத்திரத்தின் இளமை மற்றும் முதுமை கெட்டப்புகளும், அதில் வெளிப்படுத்திய நடிப்பு எடுபடவில்லை .

அப்பா விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலி, மீன் விற்பனையாளர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு .

மகன் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார்.

ஜெயபிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வம்சி கிருஷ்ணா, சபுமோன் அபுசலிம், அஜய், அர்ஜய் பிரின்ஸ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் நடிப்பு ஒ கே

ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையும் படத்திற்கு பக்க பலம் .

தந்தை - மகன் பாசத்துடன் வழக்கமான தாதா கதையை மையமாக வைத்து அழுத்தமில்லாத திரைக்கதை அமைப்பில் கதாநாயகனாக நடித்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் விஷால்.

ரேட்டிங் - 2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: