MediaTalks Logo
Header Advertisement
reviews
21 August 2026 at 12:16•1 Views

‘மொத ராத்திரி’ - விமர்சனம்

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
‘மொத ராத்திரி’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

வெளி நாடான துபாயில் பணிபுரியும் நாயகன் ரிஷிகாந்த் தனது சொந்த கிராமத்துக்கு வரும்போது அவரது குடும்பத்தினர் அவரது சம்மதத்தை கேட்காமல் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர்

காதல் தோல்வியில் மனமுடைந்து இருக்கும் ரிஷிகாந்த் குடும்பத்தாரின் கட்டாயத்தினால் நாயகி அனிஷ்மா அனில்குமாரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

இந்நிலையில் நாயகி அனிஷ்மா அனில்குமாருக்கும், ரிஷிகாந்துக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் அன்று இரவு நடைபெறும் மொத ராத்திரியில் ரிஷிகாந்த் பெசிக்கொண்டிரும்போது ரிஷிகாந்தை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத அனிஷ்மா அனில்குமார் தன் காதலனான ராஜா கருப்பசாமியுடன் ஊரை விட்டு ஓட அந்த அறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் .

நாயகி அனிஷ்மா அனில்குமார் தப்பிக்க முயற்சி செய்வதை பார்த்த ரிஷிகாந்த் நடு இரவில் உறவினர்களுக்கு தெரியாமல் காதலனான ராஜா கருப்பசாமியுடன் அனிஷ்மா அனில்குமாரை சேர்த்து வைக்க அழைத்து செல்கிறார் .

இறுதியில் ரிஷிகாந்த் அனுமதியுடன் அனிஷ்மா அனில்குமார் காதலனான ராஜா கருப்பசாமியுடன் அந்த ஊரை விட்டு தப்பித்தாரா ?

உறவினர்கள் அனைவருக்கும் அனிஷ்மா அனில்குமாரின் காதல் விவகாரம் தெரிந்ததா ?

ரிஷிகாந்தின் திருமண வாழ்வின் நிலை என்ன ? என்பதை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் ‘மொத ராத்திரி’.

நாயகனாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், அமைதி கலந்த இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார்,அழுத்தமான கதாபாத்திரத்தில் காதல் , தவிப்பு ,ஏக்கம் , குமுறல் என அனைத்து வித உணர்வுகளுடன் பாராட்டும்படியான நடிப்பில் ஜொலிக்கிறார் .

பூசாரியாக சேத்தன், காமெடியில் கலக்கும் பகவதி பெருமாள் ,அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் ,சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், சுமித்ராதேவி ,வேலன் ,கார்த்திகேயன் ,கௌஷிக் கபிலன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்

பரத் சங்கரின் இசையும் ,ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதியும் படத்திற்கு கூடுதல் பலம்.

நாயகனின் திருமணத்தை மையமாக கொண்ட கதையுடன் திருமண வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உறவினர்களின் மகிழ்ச்சி, மோதல் , நடைமுறை வழக்கப் பேச்சு என அனைத்தையும் அழுத்தம் கொண்ட விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் கிராம மக்களின் இயல்பான வாழ்வியலுடன் ரசிகர்கள் அனைவரும் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் படமாக பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குநர் ராஜா கருப்புசாமி.

மொத்தத்தில் ’மொத ராத்திரி’ ரசிக்க வைக்கும் சிறந்தப் படைப்பு

ரேட்டிங் - 4 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: