top of page

 ‘மண்டாடி’ - (4 / 5) விமர்சனம்

mediatalks001
16 hours ago
2 min read

Updated: 7 hours ago


RS INFOTAINMENT PVT LTD சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்  ‘மண்டாடி’


சூரி ,மஹிமா நம்பியார், சத்யராஜ்,சுஹாஸ், மிதுன் ஜெய் சங்கர்,ரவீந்திரா விஜய்,பால சரவணன்,கத்தார் ரவி, ஸ்டன் சிவா, ராம்ஸ், பத்மன் ,ஆடுகளம் முருகதாஸ், கிருத்திகா பாலசுப்ரமணியன் ,கிரிஷ் ஹாசன்,ரேகா குமணன்,அருண்குமார் M ஆகியோர் நடித்துள்ளனர் .


பாய்மரப் படகுப் போட்டியில் புகழ் பெற்று விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோரக் கிராமமான முகவைப் பட்டினத்தை அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஸ்டன் சிவாவின் மகனான சுஹாஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் .


இந்நிலையில் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கு பெறும் மண்டாடி வகையறாவை சேர்ந்த ரவீந்திரா விஜய் - மஹிமா நம்பியாரின் மகனான மிதுன் ஜெய் சங்கருக்கும் சுஹாஸின் மகனான கிரிஷ் ஹாசனுக்கும் உள்ளூர் படகுப் போட்டியின் காரணமாக ஏற்படும் பிரச்சனையில் கிராம விழாவின்போது கிரிஷ் ஹாசனை சுஹாஸின் முன்னிலையில் வெட்டி கொல்ல முயற்சி செய்கிறார் மிதுன் ஜெய் சங்கர்.


இச் சுழலில் முகவைப் பட்டினத்தில் வாழ்ந்த நாயகனான சூரி சென்னையில் வி ஜி பி தங்க கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தின் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார் .


இதற்கிடையில் சுஹாஸிடமிருந்து தப்பித்து சென்னைக்கு வரும் தனது முன்னாள் காதலி மஹிமா நம்பியாரின் மகனான மிதுன் ஜெய் சங்கரை காப்பாற்ற சூரி தன்னுடன் சென்னையில் தங்க வைக்கிறார் .


இந்நேரத்தில் சுஹாஸ் தன் அடியாட்களை வைத்து சென்னையில் மிதுன் ஜெய் சங்கரை கொலை செய்ய முயற்சிக்கும் நிலையில் இருபது ஆண்டுகளுக்கு முன் பாய்மரப் படகுப் போட்டியில் மண்டாடி வகையறா குழுவில் களம் கண்ட திறமை மிக்க வீரனான சூரி மிதுன் ஜெய் சங்கருடன் மீண்டும் முகவைப் பட்டினத்திற்கு வருகிறார்.


இக் கட்டான சூழ்நிலையில் நடக்கும் கிராம பஞ்சாயத்தில் உள்ளுரில் நடக்கும் பாய்மரப் படகுப் போட்டியில் மிதுன் ஜெய் சங்கரின் அணியும் கிரிஷ் ஹாசனின் அணியும் கலந்து கொள்ள எந்த அணி பந்தயத்தில் ஜெயிக்கிறதோ அந்த அணிக்குத்தான் கிராமத்தில் முதல் மரியாதை என இருவரது பிரச்சனைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கிறது கிராம பஞ்சாயத்து.


கிராமத்தின் பாய்மரப் படகுப் போட்டியின் பந்தயக் குழுவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செல்வாக்குமிக்க சுஹாஸ் சூரியை உயர் பரிசுத் தொகைக்கான பாய்மரப் படகுப் போட்டிக்கு சவால் விடுகிறார்.


போட்டியில் வழக்கமான விளையாடும் உள்ளூர் வீரர்கள் சுஹாஸுக்கு பயந்து ஒதுங்கி கொள்ள மிதுன் ஜெய் சங்கர்மற்றும் அனுபவமற்ற உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து சூரி ஒரு புதிய அணியை உருவாக்கி, அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு பயிற்சியைத் தொடங்குகிறார்.


போட்டியின் சில நாட்களுக்கு முன்பு ஊள்ளூரில் நடைபெறும் பயிற்சி போட்டியில் சுஹாஸுன் சதி செயலால் கயிறு அறுந்து சூரியின் அணி வீரர்களுடன் சேர்ந்த படகு கவிழ்ந்து விடுகிறது .


பயிற்சி கொடுத்த வீரர்கள் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட வழக்கமான விளையாடும் உள்ளூர் வீரர்கள் துணிந்து சூரிக்கு கைக்கொடுக்கின்றனர் .

சுஹாஸுக்கு எதிராக பந்தயம் நடைபெறும் நாளில் வீரர்களில் ஒருவராக தலைமையேற்று இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிரடியாய் களத்தில் இறங்குகிறார் சூரி .


இறுதியில் மண்டாடி வகையறா குழுவின் முகவை மைந்தன்ஸ் அணியின் சார்பில் பாய்மரப் படகுப் போட்டியில் கலந்து கொண்ட சூரியின் அணியினர் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்களா ?


காதலர்களான சூரியும் -மஹிமா நம்பியாரும் என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் ?


இருபது ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் தலைமையில் பாய்மரப் படகுப் போட்டியில் நெருங்கிய நண்பர்களாக கலந்து கொண்ட சூரிக்கும்- சுஹாஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என்ன ? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் விறு விறுப்பாக சொல்லும் படம்தான் ‘மண்டாடி’


முத்துக் காளி என்கிற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் சூரி மிக இயல்பாக கதாபாத்திரத்துடன் இணைந்து ஆக்ரோஷத்துடன் அமைதியான நடிப்பில் குறிப்பாக இறுதியில் காதலில் தோல்வியடைந்த சூரி மஹிமா நம்பியாரிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியில் மனதை கலங்க வைக்கும் திறமையான தன் நடிப்பை சிறப்பாக கையாண்டு ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார் .


நாயகியாக நடித்திருக்கும் மஹிமா நம்பியார் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .


மஹிமா நம்பியாரின் தந்தையாக நடிக்கும் சத்யராஜ் அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .


நாயகனுக்கு இணையாக நடித்திருக்கும் சுஹாஸ் வில்லனாக நடிப்பில் மிரட்டுகிறார் .


மிதுன் ஜெய் சங்கர்,ரவீந்திரா விஜய்,பால சரவணன்,கத்தார் ரவி, ஸ்டன் சிவா, ராம்ஸ், பத்மன் ,ஆடுகளம் முருகதாஸ், கிருத்திகா பாலசுப்ரமணியன் ,கிரிஷ் ஹாசன்,ரேகா குமணன்,அருண்குமார் M என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


ஜி வி பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் ,ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிரின்பிரம்மாண்ட ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


கடலோரக் கிராமத்தில் நடக்கும் பாரம்பரியமான பாய்மரப் படகுப் போட்டியை மையமாக கொண்ட கதையுடன் காதல் ,நட்பு ,பாசம் , சதி , துரோகம் என அனைத்தும் கதையுடன் பயணிக்கும் விதத்தில் இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத பாய்மரப் படகுப் போட்டியை மிக பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி ஆரம்பம் முதல் இறுதி வரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி ஆக்க்ஷன் கலந்த உணர்வுப்பூர்வமான படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.


மொத்தத்தில்  ‘மண்டாடி’ மிரள வைக்கும் தமிழனின் பாரம்பரியம்


ரேட்டிங் - 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page