top of page

‘சர்தார் 2’ - விமர்சனம்

mediatalks001
3 hours ago
2 min read

RAW சிறப்பு குழுவின் தலைமை அதிகாரியான ஆசிஷ் வித்யார்த்தி மைசூரில் உள்ள ஒரு அரண்மனையில் தலைமறைவாக இருக்கும் அச்யுத் குமாரை கண்டுபிடித்து உயிருடன் அவரை கைது செய்ய RAW சிறப்பு குழுவிடம் உத்தரவு பிறப்பிக்கிறார் .


RAW சிறப்பு குழு அச்யுத் குமாரை தேடும் நிலையில் அவர்களுக்கு முன்பாக அச்யுத் குமாரை பிடித்து மேலதிகாரியிடம் ஒப்படைத்து தனது திறமையை நிரூபிக்க RAW அமைப்பின் DAS பிரிவில் பணியாற்றும் நாயகன் கார்த்தி முயற்சிக்கிறார்.


இந்நிலையில் கார்த்தி அச்யுத் குமாரை கண்டுபிடிக்கும்போது அவரை ரகசியமாய் சந்திக்கும் மாளவிகா மோகனின் மகளான ஆஷிகா ரங்கநாத்திடம் கத்தி போன்ற சாவி ஒன்றை கொடுக்கும்போதே சர்வதேச கூலிப்படை கும்பலின் ஒருவன் அச்யுத் குமாரை கொலை செய்வதோடு, அவரிடம் இருக்கும் கத்தி போன்ற சாவியை கைப்பற்ற முயற்சிக்கிறான்.


இந்நேரத்தில் இறப்பதற்கு முன்பு அச்யுத் குமாரிடம் இருந்த கத்தி போன்ற சாவியை பெறும் கார்த்தி, அவர் மூலம் தனது தந்தை உயிருடன் இருப்பதையும், நாட்டையே அச்சுறுத்தக்கூடிய மிகப்பெரிய ஆபத்து நாட்டை அழிக்க துடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவால் வர ப் போகிறது என்பதை அறிந்துக் கொள்கிறார்.


இச் சுழலில் உயிருடன் இருக்கும் தந்தை கார்த்தியை தேடி செல்லும் மகன் கார்த்தி, இறந்த அச்யுத் குமார் கொடுத்த ரகசியமான சாவியை போல மேலும் இரண்டு சாவிகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதும், அந்த மூன்று சாவிகளை கைப்பற்ற முயற்சிக்கும் சர்வதேச கூலிப்படை தலைவன் எஸ்.ஜே.சூர்யா, அதன் மூலம் நாட்டையே அழிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதையும் தெரிந்துக் கொள்கிறார்.


ஒரு கட்டத்தில் அந்த ரகசிய சாவிகளை கைப்பற்றி, அதன் பின்னணியை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் மகன் கார்த்தி, அந்த இடத்தில் தனது தந்தை கார்த்தியை மீண்டும் சந்திக்கிறார்.

இந்த சூழ்நிலையில் நாட்டை அழிக்க துடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச கூலிப்படை தலைவன் எஸ்.ஜே.சூர்யாவின் சதி திட்டங்களின் நாச வேலையை முறியடிக்க மகனும், தந்தையும் இணைந்து மக்களை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார்கள் .


இறுதியில் சர்வதேச கூலிப்படை தலைவனான எஸ்.ஜே.சூர்யா தன் திட்டப்படி நாட்டு மக்களை அழித்தாரா ?

எஸ்.ஜே.சூர்யாவின் சதி திட்டங்களை முறியடித்து தந்தையும்-மகனும் மக்களை காப்பாற்றினார்களா ? இல்லையா ? என்பதுதான் ‘சர்தார் 2’ படத்தின் மீதி கதை


அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி,தந்தை கதாபாத்திரத்தில் தோற்றத்துடன் நடிப்பிலும் வித்தியாசத்தை வெளிப்படுத்தி ஆக்ஷன் கலந்த அமைதியான நடிப்பிலும் , மகனாக நடிக்கும் கார்த்தி சாகசம் நிறைந்த ஆக்‌ஷன் காட்சிகளிலும், விமான சாகசங்களிலும் துடி துடிப்பான இளமை துள்ளும் நடிப்பில் ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார் .


சர்வதேச கூலிப்படை தலைவனாக வழக்கமான பாணியில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வில்லனாக இருந்தாலும் மக்கள் செய்யும் தவறுகள், அதனால் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை விவரிக்கும்போது பார்வையாளர்களை யோசிக்க வைக்கும் விதத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது


ஆக்‌ஷனில் மிரட்டும் மாளவிகா மோகனன், சில காட்சிகளில் வரும் ரஜிஷா விஜயன். ஆஷிகா ரங்கநாத், அச்யுத் குமார், காமெடிக்கு யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .


இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் இசையில் காட்சிகள் அனைத்திலும் படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்து ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பின்னணி இசையுடன் படத்தின் கதையோட்டத்திற்கு இவரது இசை கூடுதல் பலம் சேர்க்கிறது .


ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் . ஆக்‌ஷன் மற்றும் சாகசகாட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்.


‘சர்தார்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதையாக நாட்டை அழிக்க நினைக்கும் வில்லனின் பின்னணியுடன் நாட்டின் சமூகப் பிரச்சனையான ஒரு பேரழிவை அழுத்தமாக சொல்வதுடன் ஆக்‌ஷன் மற்றும் சாகசம் நிறைந்த காட்சிளுடன் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகளின் எதிர்பார்ப்போடு பார்வையாளர்கள் இருந்தாலும் அழுத்தமில்லாத திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்,


மொத்தத்தில் - ‘சர்தார் 2’ உளவு துறையின் அதிரடியான ஆக்க்ஷன் மட்டும்


ரேட்டிங் - 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page