’ என்ன விலை ‘ - விமர்சனம்

ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’
கருணாஸ்,நிமிஷாசஜயன் ,விஜயலட்சுமி வீரமணி,சாஷா, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
நாயகன் கருணாஸ் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தர்ப்பண திதி கொடுக்கும் பக்தர்கள் கடலில் காணிக்கையாகச் செலுத்தும் நாணயங்களை மூழ்கி எடுக்கும் வேலையுடன் கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்து அதில் வரும் வருமானத்துடன் மனைவி விஜயலட்சுமி வீரமணி தங்கை சாஷா மற்றும் பள்ளிக்கு செல்லும் மகன் மகளுடன் வாழ்ந்து வருகிறார்
இந்நிலையில் கருணாஸ் நாணயங்களை கடலில் மூழ்கி எடுக்கும்போது பழமையான விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான நகை ஒன்று கிடைக்கிறது.
அதனை எடுக்கும் கருணாஸ் அந்தக் கடற்கரை பகுதியில் காவல் இருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் மோகன்ராமிடம் கடலில் தனக்கு கிடைத்த தங்க நகையாக நேர்மையான முறையில் அவரிடம் கொடுக்கிறார்.
அதனைப் பார்க்கும் மோகன்ராம் கருணாசுக்கு தெரியாமல் அதில் ஒரு பச்சை நிற கல்லை மட்டும் உடைத்து எடுத்து அந்த இடத்தில் வியாபாரம் செய்யும் கொட்டாச்சியின் துணையுடன் ரூபாய் மூன்று லட்சத்திற்கு அந்தக் கல்லை ஒரு வியாபாரிக்கு விற்று விடுகிறார்.
ஒரு கட்டத்தில் தன்னிடம் ஒப்படைத்த அந்த நகையை கருணாஸிடம் கொடுத்து வீட்டில் வைக்க சொல்கிறார் மோகன்ராம்.
அந்த நகை வீட்டில் இருந்தால் பிரச்சனை என நினைக்கும் கருணாஸ் மீண்டும் போலீஸ் நிலையத்தில் அதனை ஒப்படைக்க கான்ஸ்டபிளான மோகன் ராம் சப் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் கோவிலில் திருடிய நகை என கருணாஸ் மீது பழி சுமத்தி குற்றவாளியாக கைது செய்து சிறையில் அடைக்கிறார்
இச்சூழலில் கருணாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வக்கீல் நிமிஷாசஜயன் தன் திறமையான வாதத்தால் அவருக்கு ஜாமீன் பெற்று தருகிறார்.
மேலும் திருட்டு வழக்கில் கைதான கருணாஸின் மீது புதையல் துறை மற்றும் தொல்பொருள் சம்பந்தப்பட்ட துறைக்கு இந்த வழக்கை விசாரிக்க கோரி நீதிபதி வழக்கின் போக்கை திசை திருப்புகிறார் .
இச் சமயம் கடலில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கு தான் சொந்தம் என அரசு வக்கீல் வாதாடும்போது கடலில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் எடுக்கும் மக்களுக்குத்தான் சொந்தம் அதேபோல கடலில் கருணாஸ் எடுத்த தங்க நகை கருணாஸுக்கு தான் சொந்தம் என நிமிஷா சஜயன் வாதாடுகிறார்.
இந்நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கருணாஸுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்குகின்றனர்
ஒரு கட்டத்தில் போலீசாரால் அவமானப்படுத்தப்பட்ட கருணாஸை தமிழக முழுவதும் சுவரொட்டிகள் மூலமாகவும் , விளம்பர ஊடகங்களிலும் நிரபராதி என அரசு அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கையுடன் நிமிஷா சஜயன் வாதாடுகிறார்.
இறுதியில் மூன்று பேர் கொண்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதிகள் கருணாஸுக்கு வழங்கிய இறுதி தீர்ப்பு என்ன ?
குற்றம் சுமத்தப்பட்ட கருணாஸை நிரபராதி என அரசு அறிவித்ததா ?
கருணாஸை குற்றவாளி என பழி சுமத்திய மோகன் ராம் மற்றும் சக போலீசின் நிலை என்ன ? என்பதை அழுத்தமான திரைக்கதை அமைப்பில் உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம்தான் ’ என்ன விலை ‘
தவசி முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ் அனுபவ நடிகராக உடல் மொழியில் அனைத்து உணர்வுகளையும் உள் வாங்கி உணர்வுபூர்வமாக குணசித்திர நடிப்பில் கனமான கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
கருணாஸுக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நிமிஷாசஜயன் இயல்பான நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .
முதலமைச்சராக நடிக்கும் இளைய திலகம் பிரபு , கருணாஸின் மனைவியாக நடிக்கும் விஜயலட்சுமி வீரமணி, தங்கையாக நடிக்கும் சாஷா, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் பாடல்களுடன், பின்னணி இசை உயிரோட்டமுள்ள திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறது .
ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவும் மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கின் பட தொகுப்பும்படத்திற்கு கூடுதல் பலம்.
ராமேஸ்வர கடலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் நாணயங்களை முழ்கி எடுத்து வாழும் ஒரு இயல்பான மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையுடன் தன்மானம் , சுயமரியாதை ,வாழ்வாதாரம், கண்ணியம் என இவற்றுடன் குற்றமற்ற ஒருவர் எதிர்கொள்ளும் சட்டப் போராட்டங்களுடன் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் உணர்வுப்பூர்வமான கதை அமைப்பில் ஆரம்பம் முதல் முடிவு வரை எதிர்பாராத திருப்பங்களான காட்சிகளுடன் சுவாரஸ்யமாக பார்வையாளர்கள் ரசிக்கும்படி திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சஜீவ் பழூர்.
மொத்தத்தில் - ‘என்ன விலை’ குற்றமற்ற நிரபராதியின் நீதிக்கான தர்ம போராட்டம்.
ரேட்டிங் - 4. 5 / 5





Comments