top of page
mediatalks001

‘’ப்ளடி பெக்கர்’’ - விமர்சனம் !


ஆதரவில்லாத அனாதைகளான  நாயகன் கவினும் நாயகி மெர்லின் பிலிப்பும் சிறிய வயதிலிருந்தே ஒன்றாக பழகி வளர்ந்த பின் காதலர்களாகி திருமணமான பின் கட்டிட வேலை செய்து பிழைத்து கொண்டு சாலையோர பிளாட்பாரத்தில் வறுமையில் தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றனர் .


ஒரு ஆண் குழந்தைக்கு பெற்றோர்களான இருவரும்  இரவு நேரத்தில் சாலையோர பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருக்கும்போது அதி வேகமாக வரும் கார் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக   சாலையோர பிளாட்பாரத்தில்  தூங்கி கொண்டிருக்கும் நாயகி மெர்லின் பிலிப் மீது மோதி விபத்தாகி கவினின் மனைவி மெர்லின் பிலிப் இறந்து விடுகிறார் .

நாயகன் கவினும் அவரது குழந்தையும் விபத்திலிருந்து தப்பித்து கொள்ள ,,, சில ஆண்டுகளுக்கு பின் விபத்தை பற்றி மகனுக்கு சொல்லாமல் கவின் இருப்பதால் தன் தந்தை என தெரியாமலே கவினுடன் வளர்கிறான் அவர் மகன் . 

இந்நிலையில் எந்த வேலையும் செய்யாமல் பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தும் கவின் பிச்சைக்காரர்களுக்கு மட்டும் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற  பங்களாவில் நடைபெறும் ராஜ போக அசைவ விருந்துக்கு ஆசைப்பட்டு பிச்சைக்கார கும்பலுடன் செல்கிறார் .


இந்நேரத்தில் பங்களாவை சுற்றி பார்க்க கவின் உள்ளே செல்ல எதிர்பாராமல் அந்த பங்களாவில் சிக்கிக்கொள்கிறார் .

ஒரு கட்டத்தில் அங்குள்ளவர்களிடம் கவின் மாட்டி கொள்ள சொத்தை பிரிக்கும் பிரச்சனையில் ஆடம்பர அந்த பங்களாவில் வாழ்ந்து மறைந்த சினிமா நடிகர் ராதா ரவியின் கொலைகார வாரிசுகளால் கவினின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

அதே நேரத்தில் வாரிசுகள் சில பேர் அங்கு  கொல்லப்படுகிறார்கள்.

மற்றொரு பக்கம் கவின் தப்பிக்கும் நேரத்தில் ராதா ரவியின் கொலைகார வாரிசுள் அனைவரிடமும் சிக்கி கொள்கிறார் .


முடிவில் ராதா ரவி  வாரிசுகளின் தாக்குதலில் இருந்து கவின் தப்பித்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘’ப்ளடி பெக்கர்’’


நாயகன் கவின் கிழிந்து போன அழுக்கு உடை ,பரட்டைத்தலை என அசல் பிச்சைக்காரனாக நடிக்கும் காட்சிகளிலும்,,  பங்களாவில் மாட்டி கொண்டு உயிருக்கு பயந்து அலறும் போதும் , விபத்தில் பலியான  மனைவியை பார்த்து கதறும் காட்சிகளிலும்  உணர்வுபூர்வமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி  பாராட்டை பெறுகிறார்.


கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில்  நாயகியாக நடிக்கும் மெர்லின் பிலிப் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்க்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபண்டுலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் என நடித்த அனைவருமே  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையும் படத்திற்கு பக்க பலம் .

பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தும் ஒருவன் விருந்துக்கு ஆசைப்பட்டு ஆடம்பர பங்களாவில் உள்ள கொலைகார கும்பலிடம் மாட்டி கொள்ளும் கதையை மையமாக கொண்டு சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் எதிர்பார்க்காத திருப்புமுனையான கிளைமாஸ்க்குடன் க்ரைம் கலந்த    திரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார்..


ரேட்டிங் - 3 / 5

 








Kommentare


bottom of page