top of page

‘சண்டக்காரி’ - விமர்சனம்

mediatalks001
15 hours ago
2 min read

பாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் புன்னகை பூ கீதா தயாரிப்பில் ஆர்.மாதேஷ் இயக்கத்தில் 'சண்டக்காரி'


விமல் , ஸ்ரேயா ,புன்னகை பூ கீதா, சத்யன், பிரபு, கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்


இளைய திலகம் பிரபுவின் மகனான நாயகன் விமல் லண்டனில் உள்ள கம்பெனியில் அதிகாரியான ஸ்ரேயாவுக்கு அலுவலக உதவியாளராக வேலையில் சேர்கிறார்.


கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கிய விமல் அனைவருக்கும் உபயோகமாகும் கணினி செயலியை உருவாக்கும் நோக்கத்தில் ஸ்ரேயாவுக்கு அலுவலக உதவியாளராக வேலை சேரும் நிலையில் கோபத்துடன் கண்டிப்பான குணம் கொண்ட ஸ்ரேயாவிடம் பணிபுரிவது விமலுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது .


சில நாட்களுக்கு பின் மற்றவர் செய்த தப்புக்காக விமலை பணியை விட்டே நீக்குகிறார் ஸ்ரேயா.


இதற்கிடையே, ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடைந்த நிலையில், அவர் விசாவை தொடர இந்தியா சென்று அங்கிருந்து தான் விண்ணப்பிக்க வேண்டிய நிலைமை ஸ்ரேயாவுக்கு ஏற்படுகிறது.


இதனால் உயர் பதவியான சி.இ.ஓ பதவி கிடைக்காமல் போகும் நிலை ஸ்ரேயாவுக்குஉருவாகிறது.


இந்நிலையில் சாமார்த்தியமாக யோசிக்கும் ஸ்ரேயா, தனது பதவிக்காக நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்து கொண்டது போல் போலியாக நடித்து, லண்டன் குடியுரிமை பெற முடிவு செய்கிறார்.


இந்நிலையில் தன் குடியுரிமை பிரச்சனைக்காக ஸ்ரேயாவின் திருமணம் செய்து கொண்டு இரண்டு மாதங்களுக்கு பின் விவாகரத்து செய்யும் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார் விமல்


அதே நேரத்தில் , ஸ்ரேயாவுக்கு எதிராக தேவ் கில்லுடன் விமல் இணைந்து ரகசிய திட்டங்களை போடுகிறார் .


ஒரு கட்டத்தில் விமலின் பெற்றோரை சந்திக்க தமிழ்நாட்டிற்கு செல்லும் லண்டன் கார்ப்பரேட் பெண்ணான ஸ்ரேயா விமலின் கூட்டுக் குடும்பத்துடன் சேர்ந்து வாழும்போது குடும்ப உறவுகளின் பாசமான அன்பிற்கு அடிமையாகிறார் .


இறுதியில் ஸ்ரேயா விமலை திருமணம் செய்து கொண்டு இரண்டு மாதங்களுக்கு பின் விவாகரத்து செய்தாரா ?


ஸ்ரேயாவின் திருமண விவாகரத்து திட்டம் விமலின் குடும்பத்திற்கு தெரிந்ததா ? இல்லையா ?என்பது தான் ‘சண்டக்காரி’ படத்தின் கதை.


நாயகனாக நடிக்கும் விமல் கதையுடன் இணைந்து தனது வழக்கமான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .


முக்கிய கதாப்பாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா கண்டிப்பான குணம் கொண்டவராக , விமலின் குடும்பத்தை கண்டவுடன் இயல்பான குணம் கொண்டவராக காதல் , நடனம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .


விமலின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, அம்மாவாக நடித்திருக்கும் உமா பத்மநாபன், ஸ்ரேயாவின் தோழியாக நடித்திருக்கும் புன்னகை பூ கீதா, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .


அம்ரிஷ் இசையில் பாடல்களுடன் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .


ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் மாநகர அழகுடன் கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


லண்டனில் குடியுரிமை பெற தன் உதவியாளருடன் போலித் திருமணம் செய்து கொள்ளும் கார்ப்பரேட் பெண் அதிகாரியின் கதையை மையமாக வைத்து லண்டனுடன் சேர்ந்து தமிழ்நாட்டின் கிராம பின்னணியுடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் காதல் ,அன்பு ,பாசம் ,உறவுகள் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான குடும்ப படமாக அனைவரும் ரசிக்கும் விதத்தில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.மாதேஷ்,


மொத்தத்தில் - ‘சண்டக்காரி’ உறவுகளின் அன்பை புரிந்தவள்


ரேட்டிங் 3 /5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page