top of page

‘பாரிஸ் கஃபே’ - விமர்சனம்

mediatalks001
1 hour ago
2 min read

அமெரிக்காவில் பணிபுரியும் குரு சோமசுந்தரத்தின் மகள் அர்ச்சனா அதிகமான சம்பளத்தில் தனக்கு மற்றொரு நிறுவனத்தில் வேலை கிடைத்ததை மகிழ்ச்சியாக சொல்வதற்கு தன் அப்பா, அம்மாவிடம் போனில் தொடர்பு கொள்ளுபோது முற்போக்கு சிந்தனை ,கொள்கை ,கோட்பாடு என எதிலும் நேர்மையாக இருக்கும் சமூக சேவகி அனுமோல் சில பிரச்சனைகளால் அப்பாவை பிரிந்து வாழ்கிறார் என்பதை தெரிந்தவுடன் காதலன் விஜய் விஷ்வாவுடன் இந்தியா திரும்புகிறார் .


இந்நிலையில் பிரிவதற்கு முன் குரு சோமசுந்தரமும் ,அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் போன்ற சிறந்த தம்பதியை பார்க்க முடியாது, என்று சான்றிதழ் கொடுக்கும் வகையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.


இச் சுழலில் மருத்துவ கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ள பாரிஸுக்கு செல்லும் குரு சோமசுந்தரம், அங்கிருக்கும் கஃபேயில் இருக்கும் படங்களை பார்த்து கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் சென்னையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.


அந்த புகைப்படம் எடுத்த பெண்மணியிடம் அவர்களை பற்றி தெரிந்து கொண்டு அதிர்ச்சியடையும் குரு சோமசுந்தரம் சென்னை திரும்பியவுடன் தன் மனைவியிடம் அந்த காதல் ஜோடி பற்றிய உண்மைகளை சொல்வதோடு, அவர்கள் உயிருடன் இல்லை, என்பதையும் சொல்கிறார்.


குரு சோமசுந்தரம் சொல்வதை கேட்ட பிறகு, பத்திரிகை செய்தி மூலமாக அந்த காதல் ஜோடி பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ளும் அனுமோல், குரு சோமசுந்தரத்தின் மீது கோபமடைந்து, அவரை விட்டு பிரிந்து சென்று விடுகிறார்.


அம்மா அப்பா பிரிந்ததால் தனது காதலர் விஜய் விஷ்வாவுடன் அமெரிக்காவில் இருந்து வந்த மகள் அர்ச்சனா இருவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து முயற்சிக்கிறார்.


ஆனால் அனுமோல் குரு சோமசுந்தரத்திடம் மீண்டும் உங்களிடம் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நான் சொல்வதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என பிடிவாதமாக நிபந்தனை விதிக்கிறார் .



அனுமோல் குரு சோமசுந்தரத்திடம் மீண்டும் சேர்ந்து வாழ விதித்த நிபந்தனை என்ன?

இறந்து போன இளம் காதல் ஜோடிக்கும் மருத்துவரான குரு சோமசுந்தரத்திற்கும் என்ன தொடர்பு ?

குரு சோமசுந்தரம் அனுமோல் சொன்ன நிபந்தனையை ஏற்றுக் கொண்டாரா ? என்கிற கேள்விகளுக்கான பதில்களை சமூக அக்கறையோடு சொல்லும் படம்தான் ‘பாரிஸ் கஃபே’.


முக்கிய கதாபாத்திரங்களில் காதலித்து திருமணம் செய்து கணவன் – மனைவியாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இருவரும் இயல்பான நடிப்பின் மூலம் உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கியுள்ளனர்


இளம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் விஜய் விஷ்வா மற்றும் அர்ச்சனா இளமை துள்ளும் நடிப்பிலும் ,மற்றொரு ஜோடியான சாய் விக்கி மற்றும் நயனா சாய் இதயத்தை கனக்க செய்யும் அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி, அமெரிக்கா மற்றும் பாரிஸ் போன்ற இடங்களை காட்சிகளில் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்.


கே இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்கள். பின்னணி இசையும் படத்திற்கு ம் பக்க பலம்


ஆணவப் படுகொலையை மையமாக கொண்ட கதையுடன் அழகான காதல் கதையில் , சுவாரஸ்யம் மிக்க விறுவிறுப்பான நேர்த்தியாக திரைக்கதை அமைத்து சமுக சிந்தனையுடன் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கதையை நகர்த்துவதுடன் இயல்பான காதல் கலந்த சமூகப் பிரச்சனைகளை பார்வையாளர்களுக்கு வலியுறுத்தும் வகையில் மிக சிறப்பாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சரஜ் சீலன்.


மொத்தத்தில், ‘பாரிஸ் கஃபே’ .காதலுடன் சேர்ந்த சமுகத்திற்கான சிறந்த படைப்பு


ரேட்டிங் 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page