‘பீப்’ - விமர்சனம்

நாயகன் ராகவ் அறிவியல் பூர்வமான அபூர்வ சக்தியால் எந்த புகைப்படத்தை பார்த்தாலும் அதில் ஊடுருவி தன் அறிவினால் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை சரியாக யூகிக்கும் சக்தி படைத்தவராக இருக்கிறார்.
அவருக்கு கடவுள் கொடுத்த சக்தி, என்று அவரது நண்பர்கள் சொன்னாலும்,
இது அறிவியல் பூர்வமான உண்மை என அவர் நம்புகிறார்.
பிரபல நடிகை இதி ஆச்சார்யாவை சந்திக்க அவரது தீவிர ரசிகராக இருக்கும் ராகவ் , அந்த நடிகையை நேரில் சந்திப்பதற்கான ஈடுபடும்போது பாலியல் தொழிலாளியான யாமினி லக்ஷ்மணனின் நட்பு கிடைக்கிறது.
யாமினி லக்ஷ்மணனிடம் ராகவ், நட்புடன் நண்பராக பழகி வரும் சூழலில், திடீரென்று யாமினி லக்ஷ்மணன் ஒரு இரவுநேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார்.
இன்ஸ்பெக்டர் நித்திஷின் தீவிர விசாரணையில் அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என்பது உறுதி செய்யப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் கிடைக்காமல் போலீஸ் விசாரணையில் தாமதமாகிறது .
மற்றொரு பக்கம் யாமினி லக்ஷ்மணனின் கொலைக்கான பின்னணியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் ராகவ் .
இந்நிலையில் காவல்துறையும் தனது பாணியில் தகுந்த ஆதாரங்களுடன் குற்றவாளியை பிடிப்பதில் தீவிரம் காட்டுகிறது.
இறுதியில் யாமினி லக்ஷ்மணன் என்ன காரணத்திற்காக அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்து இறந்தார் ? யாமினி லக்ஷ்மணனை கொலை செய்த மர்ம நபர் யார் ? என்பதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லும் படம் தான் ‘பீப்’.
அபூர்வ சக்திப் படைத்த மனிதராக கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராகவ், கொலையாளியை கண்டுபிடிக்க புலன்விசாரணை மேற்கொள்ளும் காட்சிகளிலும் ,ஒரு நண்பராக பழகும் காட்சிகளிலும் ,போலிசாரிடம் கொலையைப் பற்றி விவரிக்கும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .
பாலியல் தொழிலாளி சுனைனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாமினி லக்ஷ்மணன், அறைகுறை ஆடைகளுடன், புடவையிலும் கவர்ச்சி காட்டி எதார்த்த நடிப்பில் ரசிகர்களை ஏங்க வைக்கிறார் .
பேராசிரியர் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எல்.சண்முக சுந்தர், நடிகை நயனா கபூராக நடித்திருக்கும் இதி ஆச்சார்யா, நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரேமா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நித்திஷ், சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாலாஜி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமார் ஒளிப்பதிவும் ,இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி யின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
புதுமையான அறிவியல் பின்னணியுடன் கூடிய கிரைம் சஸ்பென்ஸுடன் விறுவிறுப்பான குற்றப் புலனாய்வுத் திரில்லர் கதையை மையமாக வைத்து கிளுகிளுப்பான காட்சிகளுடன் நம்ப முடியாத ஒரு விசயத்தை அறிவியல் பூர்வமாக சொல்லி, இரண்டாம் பாதியில் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?, என்கிற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கி கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானராக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எல்.சண்முக சுந்தர்,.
மொத்தத்தில், ‘பீப்’ ரசிக்க வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்
ரேட்டிங் - 3 / 5





Comments