top of page

’மத கஜ ராஜா’ – விமர்சனம்


நாயகன் விஷால் சொந்தமாக கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்ஸ்பெக்டர் ஆர் சுந்தரராஜனின் மகனான இவருக்கு சந்தானம் ,சடகோபன் ரமேஷ்,நிதின் சத்யா மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர் .


இந்நேரத்தில் நாயகி அஞ்சலியின் அப்பாவான சுவாமிநாதனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார் விஷால் .


சுவாமிநாதனும் அவரது மகளான அஞ்சலியும் விஷால் வீட்டில் இருப்பதால்

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க,,,, இந்த காதல் விவகாரம் ஆர் சுந்தரராஜனுக்கு தெரிய வர அஞ்சலியின் குடும்பத்தை ஊரை விட்டு அனுப்பிவிடுகிறார்.


இந்நிலையில் பள்ளி ஆசிரியர் மகள் திருமணத்தில் தனது பள்ளி நண்பர்களான சந்தானம், நித்தின் சத்யா மற்றும் சடகோபன் ரமேஷ் ஆகியோரை சந்திக்கிறார் விஷால்.


இதில் சந்தானம் தனது மாமியாரால் மனைவியுடன் பிரச்சனை இருப்பது விஷாலுக்கு தெரிந்து அதனை சரி செய்து வைக்கிறார்.


இதே வேளையில் சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யாவிற்கு தொழில் அதிபரான சோனு சூட் மூலம் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அறிந்து அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கும் விஷால் சென்னை வருகிறார்.


முடிவில் நாயகன் விஷால் நண்பர்களான சந்தானத்தின் பிரச்சனையையும் தொழில் அதிபரான சோனு சூட்டினால் சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யாவிற்கு ஏற்பட்ட பிரட்சனைகளிருந்து அவர்களை காப்பாற்றினாரா?நாயகி அஞ்சலியுடன் ஏற்பட்ட காதல் வாழ்க்கை திருமணத்தில் முடிந்ததா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’மத கஜ ராஜா’


கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஷால் இயல்பான நடிப்பில் . நட்பு, காதல், நடனம் ,ஆக்க்ஷ்ன். செண்டிமெண்ட், காமெடி என அனைத்திலும் தேர்ந்த நடிகராக சிறப்பான நடிப்பில் அசத்துகிறார் .

நாயகிகளாக நடித்திருக்கும் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் கவர்ச்சியில் தாராளம் காட்டி இளசுகளை ஏங்க வைக்கிறார்கள்


விஷாலின் நண்பராக நடித்திருக்கும் சந்தானம் வரும் அனைத்து காட்சிகளுமே காமெடி கலாட்டா,


ஒரு காட்சியில் மட்டுமே வரும் ஆர்யா , மனோபாலா, சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர் , நான் கடவுள் ராஜேந்திரன் என மற்ற காமெடி நடிகர்கள் அனைவரும் படத்திற்கு கூடுதல் சேர்க்கிறார்கள்.


வில்லனாக நடித்திருக்கும் சோனு சூட்,விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் சடகோபன் ரமேஷ், நித்தின் சத்யா என படத்தில் நடித்திருக்கும் அனைவருமே கதைக்கு ஏற்ற சரியான தேர்வு .


விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.


நண்பர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நாயகனின் கதையை அதிரடி காமெடி கலந்த திரைக்கதையில் ரசிகர்கள் சிரித்து மகிழும்படி காமெடி கலாட்டாவாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி


ரேட்டிங் - 3 .5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page